May 11, 2012

கொளுத்தும் வெயிலில் கலர், கலரான குளிர்பானங்கள் வேண்டாமே...!




வெயிலின் ராஜ்ஜியம் தொடங்கியாச்சு... உச்சி முதல் உள்ளங்கால் வரை வியர்வையும், உடலுக்குள் வறட்சியும் என நம்மை வாட்டி வதைத்து விடும். இதில் முக்கியமாக தொண்டை வறட்சி... குளிராக எது கிடைத்தாலும் குடித்துவிடுவோம். கோடைகாலத்தில் கலர்,
கலரான குளிர்பானங்களை எல்லாக் கடைகளிலும் வைத்து விற்கிறார்கள். தாகம் அடங்க வேண்டும் என்பதற்காக, அவற்றை அதிக விலை கொடுத்து வாங்கி உபயோகிக்கிறோம்.

இந்த கலரான குளிர்பானங்களால் உடலில் தேவையற்ற கலோரிதான் சேருமே தவிர, வேறு எந்தவித பலன்களும் கிடையாது என்கிறார்கள் டாக்டர்கள். இப்போதெல்லாம் ஐஸ் காபி, ஐஸ் டீ ஆகியவையும் அமோகமாக விற்பனையாகின்றன. இவற்றை தவிர்ப்பதும் நல்லது.

எண்ணெயில் பொரித்து எடுக்கும் சைவ மற்றும் அசைவ உணவு வகைகளை இந்த கோடையில் முடிந்தவரை தவிர்ப்பதுதான் நல்லது.

வெளியில் சென்றால் கையோடு ஒரு பாட்டிலில் சுத்தமான குடிநீரை எடுத்து செல்லுங்கள். இல்லையென்றால், இயற்கை பானமான இளநீரை வாங்கி குடியுங்கள்.

மோர், எலுமிச்சை பழச்சாறு ஆகியவையும் நல்லதுதான். அதேநேரம், அவற்றில் சேர்க்கப்படும் தண்ணீர் சுத்தமானதாக இருக்க வேண்டும். முடிந்தவரை, அவற்றை நீங்களே வீட்டில் தயார் செய்து உட்கொள்வதுதான் சிறந்தது

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...