Jun 11, 2012

நடுத்தர வயதினரின் மனநிலையை பாதிக்கும் தொந்தி


thonthi,big stomach


அதே போல அது வரை நல்ல உடல் ஆரோக்யத்துடன் இருந்த ஒருவர் காரணம் எதுவும் இல்லாமல் அடிக்கடி சோர்ந்து போவது, எளிதில் களைத்து விடுவது, கவனக் குறைவு, அதீத ஞாபக மறதி போன்ற தொந்தரவுகள் இருந்தாலும் அதற்கு சிறுநீரக செயலிழப்பு ஒரு காரணமாக இருக்கலாம் என்பதை நினைவில் வைத்து முன்பே சொன்னபடி சில எளிய பரிசோதனைகள் மூலம் அதை தெளிவுபடுத்திக் கொள்ளலாம்.


இதே போல தோல் உலர்ந்து போதல், தோல் வெளுத்தல் அல்லது நிறம் மாறுதல், நமைச்சல், பசி இல்லாமல் இருப்பது, சிறுநீரகங்கள் உள்ள இருபுற விலாஎலும்புகளின் கீழ் வலி. கணுக்கால்களுக்கு கீழ் வீக்கம் (ஆரம்பத்தில்) போன்ற அறிகுறிகள் இருந்தாலும் சிறுநீரகங்களை பரிசோதித்தல் தவறில்லை. மேலும் சிறுவயதில் (35 வயதிற்கு கீழ்) உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் கண்டிப்பாக சிறுநீரகங்களை பார்த்துக் கொள்ள வேண்டும். இதைத் தவிர சர்க்கரை வியாதி, உயர் இரத்த அழுத்தம் (எந்த வயதினரும்), அடிக்கடி சிறுநீரில் கிருமித் தாக்குதல் வருபவர்கள், சிறுநீரக கற்கள் வந்தவர்கள், குடும்பத்தில் வேறு யாருக்கேனும் சிறுநீரக பாதிப்பு இருப்பவர்கள் சிறுநீர்கங்களை பரிசோதித்து பார்த்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் சிறுநீரக கோளாறுகளை ஆரம்பத்திலேயே கண்டுபிடிக்கவும் சரி செய்யவும் இயலும்.


 இந்த ஆரம்ப பரிசோதனைகளத் தவிர வேறு பரிசோதனைகளும் வேண்டி வருமா?


மேற்குறிப்பிட்ட எளிய பரிசோதனைகளில் கோளாறு இருப்பதாக தெரிய வந்தால் அதை மேலும் உறுதி செய்த கொள்ளவும் சிறுநீரக பாதிப்பின் தன்மை. கடுமை, சில சமயங்களில் முன்னேறிய சிறுநீரக பாதிப்பினால் வேறு உறுப்புக்கள் (முக்கியமாக இதயம்) பாதிப்பு என்பதை அறிய பல்வேறு சோதனைகள் தேவைப்படலாம்.


 சரி இந்த பரிசோதனைகளில் சிறுநீரக பாதிப்பூஃ- செயலிழப்பு உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று வைத்துக் கொள்வோம். இனி என்ன நடக்கும்.
நடுத்தர வயதில் உடல் குண்டாகி , பெரிய தொந்தியுடன் இருப்பவர்களுக்கு, வயதான பின்,மனநல பாதிப்பு ஏற்படும் என, ஆய்வில் தெரியவந்துள்ளது. நொறுக்கு தீனிகளை கண்டபடி உள்ளே தள்ளி,குண்டாகிப்போய் இருப்பவர்களுக்கு, பல்வேறு நோய்கள் ஏற்படும் என்பது,ஏற்கனவே தெரிந்தது தான். அதிகமான உடல் எடை உள்ளவர்களுக்கு, நீரிழிவு நோய், இதய நோய் ஏற்படும் என்பதும்
தெரிந்தது தான். அமெரிக்காவில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், “நடுத்தர வயதுடையவர்களுக்கு, தொந்தி பெரிதாக இருந்தால், 70 வயதை எட்டும்போது, அவர்களுக்கு “டிமென்ஷியா என்ற மனநல பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது என்பது தெரியவந்துள்ளது. ஆய்வு மேற்கொண்ட குழுவைச் சேர்ந்த ராக்கெல் ஒயிட்மெர் கூறியதாவது: நடுத்தர வயதினர், தங்கள் உடல் நலத்தில் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக,அடிவயிறு பெரிதாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அப்படி ஏதவாது அறிகுறி தெரிந்தால், அதை குறைக்க, சிகிச்சைகள் எடுத்துக் கொள்வது நல்லது. இல்லையெனில், அடி வயிறு பெரிதான பிரச்னை, நீண்ட காலத்திற்கு பின், சம்பந்தப்பட்டவரின் மூளையில் கடும் பாதிப்பை ஏற்படுத்தும். இதனால், மனநல பாதிப்பு ஏற்படும். கலிபோர்னியா மாகாணத்தில் வசிக்கும், 4045 வயதிற்குட்பட்ட , 6,500 பேரிடம் இதுபற்றி, நீண்ட கால ஆய்வு நடத்தப்பட்டது. இவர்களின், அடி வயிறின் சுற்றளவு கணக்கிடப்பட்டு, கண்காணிக்கப்பட்டது. இவர்களில், சராசரியாக, அடிவயிறு பெரிதாக இருந்தவர்களுக்கு, குறிப்பிட்ட சில ஆண்டுகளுக்கு பின் மனநல பாதிப்பு ஏற்பட்டது தெரியவந்தது. அதிகமான உடல் எடையும் சேர்ந்தால், இந்த பாதிப்பு அதிகம் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது.இவ்வாறு ராக்கெல் கூறினார்.

“டிமென்சியா’ என்றால் என்ன?“டிமென்சியா பற்றி மருத்துவ நிபுணர்கள் கூறுகையில்,டிமென்சியா என்பது குறிப்பிட்ட வகை நோய் அல்ல. மனிதனின் மூளைளை பாதிக்க கூடிய அறிகுறிகளே இது. இந்த பாதிப்பு ஏற்பட்டால், மனிதனின் சிந்திக்கும் ஆற்றல், சிதைவுறும். டிமென்சியா பாதிப்பிற்கு ஆளாகும் நபர்கள்,தங்களது உணர்வுகளை கட்டுப்படுத்தும் திறன், பிரச்னைகளுக்கு தீர்வு காணும் ஆற்றல் ஆகியவற்றை இழக்கின்றனர் என்றனர்.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...