Jun 11, 2012

சிறுநீரக செயலிழப்பு

kidney,urine,siruneerakam


வெறும் சிறுநீரக பாதிப்பு அல்லது ஆரம்ப சிறுநீரக செயலிழப்பு உள்ளவர்களுக்கு (சிறுநீரக ஸ்கான் செய்யும் போது அவை சுருங்காமல் இருக்கும்) அதிலும் சில வகை பாதிப்பு உள்ளதாக சந்தேகிக்கப்படுவர்களுக்கு (சிறுநீரக நுண்தமனி அழற்சி எனப்படும் பாதிப்பு) சிறுநீரக தசை துணுக்கு (கிட்னி டயாப்ஸி) என்ற ஒரு பரிசோதனை தேவைப்படலாம்.


இந்த பரிசோதனையின் முடிவைப் பொறுத்து சில மருந்துகளை குறிப்பிட்ட காலம்வரை மருத்துவரின் கண்காணிப்பில் எடுத்துக் கொள்வதன் மூலம் சிலவகை சிறுநீரக வியாதிகளை முழுவதும் குணப்படுத்தவோ அல்லது நன்கு கட்டுப்படுத்தவோ முடியலாம். சிறுநீரக தாரையில் கிருமி தாக்குதல், சிறுநீரக பாதையில் கற்கள் உள்ளவர்கள் அதற்குரிய வைத்தியத்திற்கு பின்னரும் இவை எதனால் வந்தது என்பதை ஆராய்ந்து அதற்குரிய மருத்துவத்தை மேற்கொள்வதால் இத்தொந்தரவுகள் மீண்டும் மீண்டும் வராமலும் அதனால் சிறுநீரகங்களின் செயல்திறன் பாதிக்கப்படாமலும் காப்பாற்றிக் கொள்ளலாம். சர்க்கரை வியாதி, உயர் இரத்த அழுத்தத்தால் சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரத்த அழுத்தத்தை நன்கு கட்டுப்படுத்தி வைப்பதன் மூலமும் சில பிரத்யேக மருந்துகளின் மூலமும் சிறுநீரக செயலிழப்பை பெருமளவு குணப்படுத்தலாம்.


சிறுநீரக பாதிப்பு செயலிழப்பு உள்ளவர்களின் சிறுநீரக பாதிப்பை பல்வேறு கட்டங்களாக பிரிக்கலாம்.


1.ஆரம்ப கட்டம் (நிலை-1) சிறுநீரக பாதிப்பு மாத்திரம் (சிறுநீரக செயலிழப்பு இல்லை) உயர் இரத்த அழுத்தம், சிறுநீரில் புரத ஒழுக்கு, கை, கால, உடல் வீக்கம் ஆகிய தொந்தரவுகள் இருக்கலாம்.


2. லேசான சிறுநீரக செயலிழப்பு (நிலை-2): இரத்தத்தில் கிரியேட்டினின் அளவு-2. மி.கி. புள்ளிக்கு கீழே). இவ்விரு சந்தர்ப்பங்களிலும் இரத்த அழுத்தக் கட்டுப்பாடு, ஆகார, மாற்றம், சிறுநீரக பாதிப்பு வேகமாக அதிகரிப்பதைத் தடுக்கும் சில மருந்துகளை சிறுநீரக மருத்துவரின் ஆலோசனைப் படி எடுத்துக் கொள்ளுதல், தொடர்ந்து சிறுநீரக மருத்துவரின் கண்காணிப்பு, சிறுநீரகங்களை பாதிக்கும் மருந்துகள், காரணங்கள் (உதாரணமாக வலி மருந்துகள், நாட்டு மருந்துகள்) ஆகியவற்றை தவிர்த்தல் ஆகிய செயல்களின் மூலம் சிறுநீரக பாதிப்பை பெருமளவு சரிசெய்யலாம் அல்லது மேலும் அதிகமாகாமல் கட்டுப்படுத்தி வைக்கலாம்.




3. அதிக சிறுநீரக செயலிழப்பு (நிலை-3)- இரத்தத்தில் கிரியேட்டினின் அளவு 2-6 மி.கி. புள்ளிகள் இந்த சமயத்தில் மேற்கூறிய சிகிச்சைகள் அல்லாமல் இரத்த விருத்திக்கான மருந்துகள், எள்ளிகள் இந்த சமயத்தில் மேற்கூறிய சிகிச்சைகள் அல்லாமல் இரத்த விருத்திக்கான மருந்துகள், எலும்புகளுக்கான மருந்துகள் இவைகளையும் சேர்த்து எடுத்துக் கொள்ள வேண்டும். இரத்தத்தில் கிரியேட்டினின் அளவு 6 மி.கிக்கு மேல் ஆகும் போது அடுத்த கட்ட முற்றிய சிறுநீரக செயலிழப்பில் மேற்கொள்ள சிகிச்சையான டயாலிசிஸ் சிகிச்சைக்கு தேவையான சில முன்னேற்பாடுக்களை செய்து கொள்ள வேண்டும். அவையாவன தொடர் டயாலிசிஸ் சிகிச்சைக்கு இரத்த குழாய்களிலிருந்து மீண்டும் மீண்டும் இரத்தம் எடுப்பதை எளிதாகும். இரத்த நாள இணைப்பு அறுவை சிகிச்சை (@ பிஸ்டுலா ஆபரேஷன்) செய்து கொள்ள வேண்டும். அதை சரியான சமயத்தில்
செய்து கொள்ளுவதால் பின்வரும் காலத்தில் பலவித செலவுகளை வெகுவாக குறைக்கலாம். டயாலிசிஸ் சிகிச்சையில் மிக எளிதாகி விடுகின்றது. ஈரலைப் பாதிக்கும் ஹெபடைடிஸ்-டீ என்ற வைரஸ் கிருமியிலிருந்து நம்மை பாதுகாக்கும் தடுப்பூசியையும் மருத்துகள் உங்களுக்கு பரிந்துரைப்பார் இதனால் டயாலிசிஸ் சிகிச்சையின் போது இந்த கிருமி வேறு யாரிடமிருந்தும் நமக்கு வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.

4. முற்றிலும் சிறுநீரக செயலிழப்பு (நிலை-4) இந்த கட்டத்தில் சிறுநீரகங்களின் மொத்த செயல் திறன் 10 சதவிகிதத்திற்கும் கீழே வந்து விடுகின்றது அப்போது இரத்தத்தில் கிரியேட்டின் அளவு 6-7 மி.கி க்கு. மேலும் பெரும்பாலும் இரத்த அளவும் மிகவும் குறைந்து விடும். அப்போது நமது உடலின் பல்வேறு உறுப்புக்களும் பாதிக்கப்பட்டு பல்வேறு வித உபாதைகள் வரலாம். இந்த சமயத்தில் டயாலிசிஸ் சிகிச்சை அல்லது சிறுநீரக மாற்று சிகிச்சை மூலம் மட்டுமே ஒருவர் தொடர்ந்து ஆரோக்யத்துடன் உயிர் வாழ முடியும். எனவே முன்பு கூறியிருந்தது போல இதற்கான ஏற்பாடுகளை தகுந்த நேரத்தில் செய்து முடித்து இருக்க வேண்டும். அதற்குரிய காலம் வந்தவுடன் டயாலிசிஸ் சிகிச்சையை தாமதமின்றி தொடங்கி முறையாக செய்து வந்தால் சிறுநீரகம் முற்றிலும் செயலிழந்த பின்னரும் கூட தொடர்ந்து நல்ல ஆரோக்யத்துடன் வாழ்வை தொடர முடியும். சிறுநீரக மாற்று சிகிச்சை செய்து கொள்ள தகுதி உள்ளவர்கள் டயாலிசிஸ் சிகிச்சைக்கு பதில் அந்த சிகிச்சையை முயற்சி செய்யலாம்.



No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...