- மீன் (சங்கரா, வெள்ளைக் களங்கா, பாறை, வஞ்சிரம், வவ்வால், வரால்) - 1/4 கிலோ.
- அரைக்க:
- மிளகு - 1 தேக்கரண்டி.
- பூண்டு - 8 பல்.
- தனியாத் தூள் - 2 தேக்கரண்டி.
- சின்ன வெங்காயம் - 10
- தக்காளி - 1 பெரியது.
- தாளிக்க:
- வெங்காயம் பொடியாக நறுக்கியது - 1.
- வெந்தயம் - 1/2 தேக்கரண்டி.
- கடுகு - 1/2 தேக்கரண்டி.
- சீரகம் 1/4 தேக்கரண்டி.
- கறிவேப்பிலை - சிறிதளவு.
- எண்ணெய் - தேவையான அளவு.
- மற்றவை:
- புளி -1 எலுமிச்சை அளவு
- மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி.
- உப்பு - தேவையானது
- புளியை தண்ணீர் விட்டு கரைசல் செய்து, அதனுடன் அரைத்த மசாலா, உப்பு, மஞ்சள் தூள் ஆகியவற்றைக் கலந்து, சுவை பார்த்து வைத்துக் கொள்ள வேண்டும்.
- கடாயில் எண்ணெய் சூடானதும் தாளிப்புப் பொருட்களை சேர்த்து, தாளித்து, கலந்த மசாலாவை ஊற்றி, தேவையான தண்ணீர் கலந்து, பச்சை மசாலா வாசம் நீங்கும் வரை கொதிக்க வைத்து, அதன் பின் மீன் துண்டுகளை சேர்த்து, மூடி போட்டு 5 நிமிடம் மிதமான தீயில் சமைத்தால் எண்ணெய் மேலெழும்பி கவர்ச்சியும், சுவையும் மிக்க மீன் குழம்பு தயாராகி விடும்.
Note:
வழக்கமாய் செய்யப்படும் மீன் குழம்பை விட சுவையிலும், நறுமணத்திலும்
வேறுபட்ட இந்தக் குழம்பு பெரும்பாலானவர் விரும்பி செய்வார்கள் என
நம்புகிறேன். ஒரு முறை செய்துதான் பாருங்களேன்! காரம் கூட்டியோ அல்லது
குறைத்தோ அவரவர் விருப்பப்படி செய்து கொள்ளவும்.
Time in Colombo 


























No comments:
Post a Comment