Aug 24, 2012

செவ்வாய் வான்வெளியில் நடனமாடும் விளக்குகள்?

கியூரியாசிடி கேமராவில்


லண்டன் : செவ்வாய் கிரகத்தை ஆராய்ந்து வரும் கியூரியாசிடியின் கேமராவில் நேற்று விசித்திர காட்சிகள் பதிவானதாக தகவல் வெளியானது. அவை நடனமாடும் விளக்குகள் (டான்சிங் லைட்ஸ்) போல இருந்ததாக இங்கிலாந்து மீடியா தெரிவித்தது. செவ்வாயில் இறங்கிய அமெரிக்காவின் கியூரியா சிடி  முழுவீச்சில் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது. தினசரி போட்டோக்களை அனுப்புகிறது.

கியூரியாசிடி நேற்று முன்தினம் அனுப்பிய படங்கள் சிலவற்றில் செவ்வாயின் தரைப் பகுதிக்கு மேலே விளக்குகள் நடனமாடுவது போன்ற காட்சி பதிவாகியிருந்தது. அது விண்கற்கள் இடமாற்றமாக இருக்கலாம் என்று நாசா விஞ்ஞானிகள் தெரிவித்தனர். இது பற்றி லண்டனில், வேற்று கிரக மனிதர்களை (ஏலியன்ஸ்) பற்றி ஆராயும் ஸ்டீபன் ஹன்னார்டு கூறியதாக ஹஃப்பிங்டன் போஸ்ட் வெளியிட்ட செய்தியில், ‘அண்ட வெளியில் மனிதர்கள் கால் பதிப்பதை கண்காணிக்கும் வேற்று கிரக மனிதர்களின் விண்வெளி ஓடங்கள் அவை’ என்று கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...