Aug 24, 2012

கியூரியாசிடி விண்கலத்தில் விண்ட் சென்சார் பழுது




லண்டன் : செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியம் இருக்கிறதா என்று ஆராய அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா, சமீபத்தில் ‘கியூரியாசிடி ரோவர்’ விண்கலத்தை அனுப்பியது. உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய அது வெற்றிகரமாக செவ்வாயில் தரையிறங்கி படங்களை அனுப்ப தொடங்கியது. செவ்வாயின் மலைகளில் பாறைகளை கை வடிவில் உள்ள ட்ரில்லர் மூலம் குடைந்து மாதிரி மண் எடுத்து பரிசோதிக்கும் வசதி கொண்டது கியூரியாசிடி. தவிர, உயிர் வாழ தேவையான ஆக்சிஜன், பாஸ்பரஸ் உட்பட பல்வேறு வேதி பொருட்கள் இருப்பது பற்றி ஆராய்ந்து தகவல் அனுப்பவல்லது.

அதில் 10க்கும் மேற்பட்ட கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில், கியூரியாசிடி விண்கலத்தில் முதல் பின்னடைவாக அதன் வானிலை ஆய்வு மைய ‘விண்ட் சென்சார்’ கருவி சேதமடைந்தது. இதுபற்றி கியூரியாசிடி விண்கலத்தை கையாளும் நாசா விஞ்ஞானி ஜேவியர் கோம்ஸ் எல்விரா கூறுகையில், ‘‘இது சிறிய ஏமாற்றம்தான். சரி செய்வதற்கான முயற்சிகள் நடக்கின்றன. இதனால், கியூரியாசிடியின் செவ்வாய் கிரக ஆராய்ச்சி தடைபடாது’’ என்றார்.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...