Sep 29, 2012


செய்திச் சேவையில் 10 ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்தது கூகிள்:

கூகிள் நிறுவனத்தின் செய்திப் பிரிவு தனது 10 ஆவது வருட நிறைவை கடந்த திங்கட்கிழமை கொண்டாடி மகிழ்ந்துள்ளது. 2002 ஆம் ஆண்டு செப்டம்பர் 22 ஆம் திகதி கூகிளின் செய்திப் பிரிவு உத்தியோக பூர்வமாக ஆரம்பிக்கப் பட்டதுடன் கடந்த 10 வருடங்களில் அது மகத்தான வளர்ச்சி கண்டுள்ளது.
72 வகைகளில் 30 மொழிகளில் கூகிள் செய்திச் சேவை இயங்குகின்றது. சுமார் 50 000
செய்தித் தளங்களில் இருந்து கூகிளின் செய்திகள் தொகுக்கப் படுகின்றன என இத் தகவல்களை புகழ் பெற்ற விஞ்ஞானியும் கூகிள் செய்திகளின் ஸ்தாபகருமான கிருஷ்ணா பாரத் தனது ப்ளாக்கரில் சனிக்கிழமை தெரிவித்திருந்தார்.
மேலும் கூகிள் செய்திகளுக்குப் பின்னால் இயங்கும் தொழிநுட்பக்குழு, கூகிளின் மூலம் செய்திகளைத் தேடும் சேவையையும் இதனுடன் இணைப்பதுடன் இவ்விரு சேவைகளும் சேர்ந்து ஒவ்வொரு வாரமும் ஒரு பில்லியன் வாசகர்களுக்குப் பயன்பட்டு வருகின்றன.
கூகிள் தனது செய்திச் சேவை பற்றிக் கூறுகையில் - இப்பிரிவு ஆரம்பிக்கும் கட்டத்தில் இருந்த போதுதான் செப்டெம்பர் 11 நியூயோர்க் கட்டடத் தாக்குதல் நிகழ்ந்ததாகவும் இதனால் இது குறித்து பல்வேறு செய்தி ஸ்தாபனங்களிலும் இருந்து நிமிடத்துக்கு நிமிடம் செய்திகளை சேகரித்து வழங்குவதில் முனைப்புக் காட்டிய கூகிள் அன்றிலிருந்து இன்று வரை இவ்வாறே இயங்கி வருகின்றது என்று தெரிவித்துள்ளது

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...