Sep 3, 2012

பாகிஸ்தானில் அமெரிக்க தூதரக கார் மீது வெடிகுண்டு நிரப்பிய கார் மோதல்: 3 பேர் உடல் சிதறி பலி

பாகிஸ்தானில் அமெரிக்க தூதரக கார் மீது வெடிகுண்டு நிரப்பிய கார் மோதல்: 3 பேர் உடல் சிதறி பலி
-

பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் ஆப்டரா சாலையில் ஐ.நா. அகதிகளுக்கான தூதரகமும், அமெரிக்க தூதர் அலுவலகமும் உள்ளன. இன்று காலை அமெரிக்க தூதரக அலுவலக கார் ஒன்று தூதரகத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது வெடிகுண்டுகள் நிரப்பிய கார் ஒன்று அமெரிக்க தூதரக கார் மீது வேகமாக மோதியது.

இதில் வெடிகுண்டுகள் நிரப்பிய கார் வெடித்து சிதறியது. அமெரிக்க தூதரக காரும் பலத்த சேதம் அடைந்தது. இந்த குண்டு வெடிப்பில் 3 பேர் உடல் சிதறி பலியானார்கள். வெளிநாட்டினர் உள்பட 12 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

பலியானவர்களில் ஒருவர் வெளிநாட்டை சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. ஆனால், இது உறுதிப்படுத்தபடவில்லை. வெடிகுண்டு கார் தாக்குதலை தொடர்ந்து, அந்தப் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...