Sep 10, 2012

சீன அமைதி விருதுக்கு பில்கேட்ஸ் பெயர் பரிந்துரை!

சீன அமைதி விருதுக்கு பில்கேட்ஸ் பெயர் பரிந்துரை
சீன அமைதி விருதுக்கு ஐ.நா. முன்னாள் பொதுச் செயலாளர் கோபி அன்னான், மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் உள்ளிட்டோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. கன்பூஷியஸ் அமைதி விருதுக்கு பரிந்துரை செய்யப்படுபவர்களின் பெயர்கள் நேற்று அறிவிக்கப்பட்டன.
சீன அரசின் சிபாரிசு எதுவும் இல்லாமல், சுதந்திரமாக முடிவெடுத்தே இப்பெயர்களை அறிவித்ததாக விருதை வழங்கும் குழுவினர் தெரிவித்துள்ளனர். ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி,மூன், தாய்லாந்து பிரதமர் யிங்லக் ஷினவத்ரா, சீன சமூக சேவகர் வாங் டிங்கோ, பீகிங் பல்கலை. பேராசிரியர் டேங் யீஜி, சீன விஞ்ஞானி யுவான் லாங்பிங், 11வது பன்சென் லாமா ஆகியோரின் பெயர்களும் இவ்விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.
திபெத்திய மத தலைவர் தலாய் லாமாவுக்கு அடுத்து 2வது நிலையில் உள்ளவர் பன்சென் லாமா. ஆனால், இவர் சீன அரசால் நியமிக்கப்பட்டவர் என்பதால் இவரை திபெத்தியர்கள் மதத்தலைவராக ஏற்றுக்கொள்வதில்லை.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...