Sep 17, 2012

சென்காகு தீவு விவகாரம் சீனாவில் மக்கள் போராட்டம் ஜப்பான் நிறுவனங்கள் சூறை



பீஜிங் : சென்காகு தீவு விவகாரத்தில், ஜப்பானுக்கு எதிராக சீனாவில் நடக்கும் போராட்டங்கள் மோசமான நிலையை எட்டியுள்ளன. ஜப்பானைச் சேர்ந்த பானசோனிக், கேனான் தொழிற்சாலைகள் சூறையாடப்பட்டன. ஜப்பானியர்கள் சென்காகு என்றும், சீனர்கள் டயாயு என்றும் அழைக்கும் கிழக்கு சீன கடலில் உள்ள தீவை தமக்குதான் சொந்தம் என இரு நாடுகளும் உரிமை கொண்டாடி வருகின்றன. இந்த விவகாரத்தால், சீனாவில் ஜப்பானுக்கு எதிராக மக்கள் கடந்த ஒரு வாரமாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால், இருநாடுகளுக்கு இடையே உறவு பாதிக்கத் தொடங்கியுள்ளது.

சீனா,ஜப்பான் இடையில் ஆண்டுக்கு 34,500 கோடி டாலர் அளவுக்கு வர்த்தம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சீனாவில் உள்ள பானசோனிக் நிறுவனத்தின் இரு ஆலைகள் மீது மக்கள் திடீர் தாக்குதல் நடத்தி, சூறையாடினர். அதே போல், கேனான் நிறுவனத்தின் 3 ஆலைகளும் தாக்குதலுக்கு உள்ளாகின. சீனாவில் பெரிய தொழிற்சாலையைக் கொண்டுள்ள டொயோட்டா கார் உற்பத்தி நிறுவனமும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனத்தின் கார்கள் பல இடங்களில் அடித்து நொறுக்கப்பட்டன.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...