Oct 29, 2012

உலகின் அதிக நட்புறவான நாடாக மலேசியா 10-வது இடத்தில் தேர்வு

உலகின் அதிக நட்புறவான நாடாக மலேசியா 10-வது இடத்தில் தேர்வு


பெட்டாலிங் ஜெயா, அக்டோபர் 29-உலகிலேயே அதிக நட்புறவான நாடுகளின் பட்டியலில் மலேசியா 10-வது இடத்தைப் பிடித்துள்ளது.
அண்மையில் Forbes நடத்திய ஆய்வில் இது தெரிய வந்துள்ளது.
சிறந்த வாழ்க்கைத் தரம், திருப்திகரமான சமூக, சுலபமான பொதுபோக்குவரத்து, மற்றும் தங்கள் நாடுகளை விட நல்லதொரு வீட்டு வசதி போன்றவையே மலேசியாவை சிறந்த நட்புறவான நாடாக திகழச்செய்துள்ளதாக Forbes தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் துன் ரசாக் தனது டுவீட்டர் அகப்பக்கத்தில் உலக மக்களை வரவேற்கிறோம் என கருத்து தெரிவித்துள்ளார்.
வருமான வரி இல்லாத காரணத்தாலும், மிகவும் அரிதான குற்றச்செயல்கள், மாசுபடாத சுற்றுச்சூழல் மற்றும், வருடம் முழுவதும் நீடிக்கும் கோடைக்காலம் போன்றவற்றால் Cayman தீவுகள் உலகிலேயே அதிக நட்புறவான நாடுகளாக முன்னணி வகிக்கின்றன.
Forbes நடத்திய இந்த ஆய்வில், உலகிலே அதிக நட்பான நாடாக கனடா நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. இதனைத் தொடர்ந்து நியுசிலாந்து ஐந்தாவது இடத்தையும்,  ஸ்பைன், இங்கிலாந்து, பெர்முடா, தென் ஆப்பிரிக்காவுக்குப் பின்னர் மலேசியா 6-வது இடத்தைப் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...