Oct 25, 2012

இன்று அதிகாலை கியூபாவை மணிக்கு 145 கி.மீ. வேகத்தில் தாக்கியது சூறாவளி ‘சான்டி’

 25 October 2012,



சூறாவளி ‘சான்டி’ ஜமைக்காவை கடந்து, கியூபாவின் கிழக்குப் பகுதியை தற்போது தாக்கத் தொடங்கியுள்ளது. கடும் மழை, மற்றும் அதிவேகக் காற்று, இப்பகுதியை தற்போது தாக்குகின்றன.
நேற்று (வியாழக்கிழமை) மாலை கரிபியன் கடலில் ஆரம்பித்த சூறாவளி ‘சான்டி’, ஜமைக்காவை நேற்றிரவு தாக்கி சேதம் விளைவித்த நிலையில், இன்று அதிகாலை (நள்ளிரவு கடந்த நேரத்தில்) கியூபாவை தொட்டது. கியூபா காலநிலை மையத்தின் எச்சரிக்கையை அடுத்து, சுமார் 55,000 பேர் வேறு பாதுகாப்பான இடங்களுக்கு நேற்றிரவே அப்புறப்படுத்தப்பட்டனர்.
இன்று அதிகாலை கியூபா கிழக்குப்பகுதி கடற்கரையில், அலைகள் 26 அடி
(சுமார் 8 மீட்டர்கள்) உயரத்துக்கு எழுந்து, கரையைக் கடந்தன.
கியூபாவின் இரண்டாவது பெரிய நகரமான சான்டியாகோ டி கியூபா, இந்த சூறாவளியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நகரம், தலைநகர் ஹவானாவில் இருந்து 750 கி.மீ. தென்கிழக்கே உள்ளது.
கட்டகரி இலக்கம்-1 ரகத்திலான சூறாவளி இது என்று அறிவிக்கப்பட்டது. இன்று அதிகாலை காற்றின் வேகம் மணிக்கு 145 கி.மீ அளவை அடைந்ததையடுத்து, கட்டகரி இலக்கம்-2 ரகத்திலான சூறாவளியாக மாற்றம் பெற்றுள்ளது.
சூறாவளி ‘சான்டி’, கல்ஃப் ஆஃப் மெக்சிகோவை நோக்கி செல்லவில்லை என அமெரிக்க காலநிலை அவதானிப்பு நிலையம் தெரிவித்துள்ளது. (அங்குதான், அமெரிக்காவின் எண்ணை, மற்றும் எரிவாயு மையங்கள் உள்ளன)

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...