Oct 25, 2012

அளவற்ற இன்டர்நெட் விரும்பும் இந்தியர்கள்


  24 Oct 2012

இந்தியாவில் இன்டர்நெட் பயன்பாடு குறித்து ஆய்வு நடத்திய அமைப்பு, நம் மக்கள் எந்த கட்டுப்பாடும் இல்லாத, அளவற்ற இன்டர்நெட் இணைப்பு தரும் கட்டண திட்டங்களையே விரும்புகிறார்கள் என்று அறிவித்துள்ளது. 

ஏர்னஸ்ட் அண்ட் யங் என்னும் இந்த அமைப்பு இந்தியா மட்டுமின்றி அமெரிக்கா உட்பட 12 நாடுகளில் இத்தகைய ஆய்வுக் கணக்கெடுப்பினை மேற்கொண்டது. 

மாறாத ஒரே மாதக் கட்டணத்தில் அளவற்ற டேட்டா தரவிறக்கம் செய்திடும் திட்டங்களையே தங்கள் மொபைல் போன்களில் மேற்கொள்ள 54% மக்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். 

கணக்கெடுப்பில் கலந்து கொண்டோரில், மூன்றில் ஒருவர் டவுண்லோட் செய்யப்படும் டேட்டா அடிப்படையிலான திட்டங்களைப் புரிந்து கொள்ள இயலவில்லை எனத் தெரிவித்துள்ளனர். 

ஆனால் 31% பேர், இந்த திட்டங்களை நன்கு புரிந்து கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவில் 16% பேர், பிரிட்டன் மற்றும் ரஷ்யாவில் 24% தான் இதனைப் புரிந்து கொண்டதாகக் கூறினார்கள். 

மொபைல் வழி இன்டர்நெட் சேவை வழங்கும் நிறுவனங்கள், மக்களிடம் தாங்கள் தரும் இணைப்பு எந்த அளவிற்குப் பாதுகாப்பானது என்றும், அதற்குத் தாங்கள் எடுக்கும் நடவடிக்கை குறித்தும் மக்களிடம் தெரிவிப்பது நல்லது என்று இந்த கணிப்பை நடத்திய நிறுவனம் அறிவித்துள்ளது. 
இந்தியாவில் இன்டர்நெட் பயன்பாட்டிற்கு அதிகம் செலவழிப்போர், 3ஜி பயன்படுத்துவோர் மட்டுமே எனவும் அறிவித்துள்ளது. ஆனால், மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் இது மிகவும் குறைவு என்றும் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...