Oct 17, 2012

ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வது 5 சதவீதம் குறைந்தது October 2012



oil_29புதுடில்லி : ஈரான் நாட்டில் இருந்து, சென்ற ஆகஸ்ட் மாதம், இந்தியா மேற்கொண்ட கச்சா எண்ணெய் இறக்குமதி, முந்தைய மாதத்தை விட, 5 சதவீதம் குறைந்துள்ளது. அதே சமயம், சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாத இறக்குமதியுடன் ஒப்பிடும் போது, 19 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.
நான்காவது இடம்:ஈரானில் இருந்து தொடர்ந்து மூன்று மாதங்களாக, இந்தியா இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய் அளவு குறைந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.மதிப்பீட்டு காலத்தில்,
ஈரானில் இருந்து நாளொன்றுக்கு, 4.63 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்துள்ளது. இது, முந்தைய ஜூலை மாதத்தில், 4.54 லட்சம் பீப்பாயாக இருந்தது.உலகளவில், கச்சா எண்ணெய் இறக்குமதியில், இந்தியா, நான்காவது இடத்தில் உள்ளது. ஈரான் ரகசியமாக, அணுஆயுத தயாரிப்பில் ஈடுபட்டு வருவதாக, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன.
இதை ஈரான் மறுத்து வருகிறது. இருந்தபோதிலும், ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது.
சென்ற ஜூலை முதல், ஈரான் கச்சா எண்ணெய் கப்பல் போக்குவரத்துக்கும், சரக்கு கப்பல்களின் காப்பீட்டிற்கும், ஐரோப்பிய நாடுகள் தடை விதித்துள்ளன.

இதனால், இந்தியாவை சேர்ந்த எம்.ஆர்.பி.எல்., உள்ளிட்ட எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள், ஏற்கனவே அளித்த ஆர்டரின்படி, குறிப்பிட்ட அளவிலான கச்சா எண்ணெயை இறக்குமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இத்தகைய காரணத்தால், ஈரான் நாட்டில் இருந்து, இந்தியா மேற்கொள்ளும் கச்சா எண்ணெய் இறக்குமதி குறைந்துள்ளது.
விலக்கு:அமெரிக்க அரசு, நடப்பாண்டில், ஈரானில் இருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்யும் அனைத்து நாடுகளுக்கும், 180 நாட்களுக்கு தடையில் இருந்து விலக்கு அளித்துள்ளது.இதன்படி, ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைத்துக் கொண்ட ஜப்பான் மற்றும் 10 ஐரோப்பிய நாடுகளுக்கான, தடை விலக்கல் காலம், நடப்பு மாதம் புதுப்பிக்கப்பட்டுஉள்ளது. வரும் மாதங்களில், இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கான இறக்குமதி குறித்து பரிசீலிக்கப்பட உள்ளது.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...