Oct 17, 2012


woman_17 சவூதியில் அடுத்த மாதம் முதல் கோர்ட்டுகளில் பெண் வக்கீல்கள் வாதாட அனுமதி
ரியாத்: சவூதியில் அடுத்த மாதம் முதல் கோர்ட்டுகளில் பெண் வக்கீல்கள் வாதாட அனுமதியளிக்கப்பட உள்ளது. சவூதியில் அந்நாட்டு சட்டப்படி பெண்கள், கார் டிரைவிங் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள தடைவிதிக்கப்பட்டிருந்தது. தற்போது இவைகளில் மாற்றம் கொண்டுவரப்படுகின்றன. சவூதியில் கடந்த நான்கு நாட்களாக ஈத்-அல்-அதா
என்ற மாநாடு நடந்து வருகிறது. இம்மாநாட்டில் பெண் வக்கீல்கள் கோர்ட்டுகளில் வாதாட அனுமதியளிக்க வலியுறுத்தப்பட்டு வந்தது. இதையடுத்து அடுத்த மாதம் முதல் பெண் வக்கீல்கள் கோர்ட்டுகளில் வாதாட அனுமதிக்கப்படுவர் எனவும், கடந்த 2010-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில், இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டன. எனவே நான்கு சட்டம் படித்து நான்கு ஆண்டுகள் அனுபவம் பெற்றவர்கள் வாதாட தடையில்லை எனவும் அந்நாட்டு சட்ட அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...