Oct 5, 2012

உலகளாவிய ரீதியில் கடல் நீர் மட்டம் உயர்வதை உறுதிப் படுத்தும் புதிய செய்மதித் தகவல்


    உலகளாவிய ரீதியில் கடல் நீர் மட்டம் உயர்வதை உறுதிப் படுத்தும் புதிய செய்மதித் தகவல்
October 5, 2012,  

ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் செய்மதி ஒன்றின் மூலம் மேற்கொள்ளப் பட்ட ஆய்வில் உலகளாவிய ரீதியில் கடல் நீர் மட்டம் உயர்வடைந்து வருவதை விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.



இதில் முக்கியமாக பசுபிக் சமுத்திரத்தை அண்டிய நாடுகளில் கடந்த இரு தசாப்தங்களில் கடல் நீர் மட்டம் குறிப்பிட்டளவு உயர்ந்திருப்பதை இச் செய்மதியின் திருத்தமான தகவல்கள்

தெரிவிக்கின்றன.

மேலும் உலகளாவிய ரீதியில் கடல் நீர் மட்டம் கடந்த இரு தசாப்தங்களில் ஒவ்வொரு வருடமும் 3 mm (மில்லி மீற்றர்) உயர்ந்து வந்துள்ளது. எனினும் இவ்வுயர்வு எல்லா இடங்களிலும் சீராக இருப்பதில்லை. இது சராசரிக் கணிப்பேயாகும். அதாவது சில இடங்களில் கடல் நீர் மட்டம் ஒரு வருடத்துக்கு 12 mm உயர்ந்தால் மறு பக்கத்தில் 122 mm தாழ்ந்து காணப்படும் இக்கணிப்புக்கள் ஐரோப்பிய விண்வெளி ஆய்வுக் கழகத்தால் (ESA) 1992 ஆக்டோபர் முதல் மார்ச் 2010 வரை சுமார் 18 வருட கால இடைவெளிக்குள் ரேடார் வாசிப்பு மூலம் அறியப் பட்டவையாகும்.

இக்கடல் நீர் மட்டம் உயர்வடைவதற்கு விஞ்ஞானிகள் கூறும் மிக முக்கியமான காரணங்கள், புவி வெப்ப அதிகரிப்பு, கிளேசியர் எனும் பனிப்பாறைகள் உருகுதல், மற்றும் துருவப் பகுதிகளில் உள்ள பனிக்கட்டிகள் கரைதல் என்பன கூறப்படுகின்றன.

மேலும் இக் கடல் நீர் மட்ட உயர்வாலும் வெள்ளத்தாலும் கடந்த 20 ஆண்டுகளில் அதிகம் பாதிக்கப் பட்ட பசுபிக் வலய நாடுகளாக, பப்புவா நியூகினியா, பிலிப்பைன்ஸ், சொலோமொன் உட்பட சிறிய பசுபிக் தீவுகள் என்பன விளங்குகின்றன.

சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவரும் இடமான இத்தாலியில் உள்ள வெனிஸ் நகரத்தில் கடல் நீர் மட்டம் ஒவ்வொரு வருடமும் 2 mm அதிகரித்து வருவதால்  வருங்காலத்தில் எதிர் கொள்ளவுள்ள ஆபத்துக்களைச் சமாளிப்பதற்காக $7.9 பில்லியன் டாலர்கள் செலவில் தடுப்புச் சுவர்கள் கட்டப் பட்டு வருகின்றன

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...