Nov 4, 2012

மூளையே இல்லாமல் 3 வருடம் வாழ்ந்து வந்த அதிசய சிறுவன் திடீர் மரணம்


[ சனிக்கிழமை, 03 நவம்பர் 2012,
அமெரிக்காவில் கொலரடோவைச் சேர்ந்த ஒரு தம்பதிக்கு 3 ஆண்டுகளுக்கு முன்பு மூளை இல்லாமல் பிறந்த சிறுவன் நேற்று உயிரிழந்தான்.கொலரடோவைச் சேர்ந்த இந்த தம்பதிகளுக்கு பிறந்த குழந்தையின் பெயர் நிகோலஸ் கோக்.
இவனுக்கு தலைப் பகுதியில் மூளை என்ற பாகமே இல்லாமல் இருந்தது.
ஆனால் இப்படி பிறக்கும் குழந்தைகள் பிறந்த ஒரு சில நொடிகளிலேயே மரணித்துவிடும். ஆனால், அந்த விதியை உடைத்து நிகோலஸ் கோக் வாழ்ந்து வந்தான்.
எவ்வித மருத்துவ உபகரணங்களும் பயன்படுத்தப்படவில்லை. ஆனால் அவனது சீரான உடல் இயக்கங்களுக்காக ஏராளமான மாத்திரைகளை உணவை விட அதிகமாக சாப்பிட்டு வந்தான்.
இந்நிலையில், நேற்று மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்ததாக அவனது
பாட்டி தெரிவித்துள்ளார்.
அவனுடன் வாழ்ந்த வாழ்க்கை அற்புதமானது. அவன் அன்பு என்றால் என்னவென்பதையும், வாழ்க்கை என்றால் என்ன என்பதையும் கற்றுக் கொடுத்தான் என்று அவனது பாட்டி குறிப்பிட்டுள்ளார்.
உலகில் பிறக்கும் பத்தாயிரம் குழந்தைகளில் ஒருவருக்கு ஏற்படும் குறைபாடு இது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...