Nov 18, 2012

பால் தாக்கரே மறைவு தலைவர்கள் இரங்கல்

புதுடில்லி:வசேனா தலைவர் பால் தாக்கரே மறைவுக்கு, அரசியல் வேறுபாடுகளை கடந்து, அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி:ஒரு மூத்த அரசியல் தலைவரை, நாடு இழந்து விட்டது. சாதாரண மக்களின் நலனுக்காக பாடுபட்டவர். மீடியா துறையிலும், முக்கிய
பங்காற்றியவர்.


பிரதமர் மன்மோகன் சிங்:மகாராஷ்டிரா அரசியலில் தனித்துவமிக்க அரசியல் தலைவராக விளங்கியவர், பால் தாக்கரே. தன்னுடைய திறமையான அரசியல் நடவடிக்கையின் காரணமாக, சிவசேனாவை,
மகாராஷ்டிராவின் பிரதான கட்சியாக மாற்றியவர்.

அத்வானி (பா.ஜ., மூத்த தலைவர்):தாக்கரேயின் மறைவால், இந்திய அரசியலில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை, இனி நிரப்புவது கடினம். மிகச் சிறந்த பண்புகளை கொண்டவராகவும், விசுவாசமான தேசபக்தராகவும் விளங்கியவர்.

நிதிஷ் குமார் (பீகார் முதல்வர்):மகாராஷ்டிராவின் மிகச் சிறந்த அரசியல் தலைவராக திகழ்ந்தவர், பால் தாக்கரே. அவரது இழப்பு, ஈடு செய்ய முடியாதது.

மம்தா பானர்ஜி (மேற்கு வங்க முதல்வர்):நீண்ட காலமாக, மகாராஷ்டிரா அரசியலில் ஆதிக்கம் செலுத்தியவர், பால் தாக்கரே. அவரின் மறைவுக்கு, என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

பிரித்விராஜ் சவான் (மகாராஷ்டிரா முதல்வர்):அரசியல்வாதி, கார்ட்டூனிஸ்ட், ஓவியர், பேச்சாளர் என, பன்முக திறமை உடையவர், பால் தாக்கரே. அவரது மறைவு, மகாராஷ்டிராவுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தி விட்டது.

நரேந்திர மோடி (குஜராத் முதல்வர்) :மிகச் சிறந்த தேசபக்தர். என் மீது, தனிப்பட்ட முறையில், மிகுந்த பாசம் வைத்திருந்தவர். அவரது மறைவால், அரசியலுக்கு பெரிய அளவில் இழப்பு ஏற்பட்டுள்ளது.இவர்கள் தவிர, காங்., தலைவர் சோனியா, ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் மற்றும் பாலிவுட் பிரபலங்களும், தாக்கரே மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
2
  









No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...