Nov 22, 2012

நடுவானில் உடல்நலக்குறைவு: பைலட்டுக்கு பதில் பயணி விமானத்தை ஓட்டினார்

நடுவானில் உடல்நலக்குறைவு: பைலட்டுக்கு பதில் பயணி விமானத்தை ஓட்டினார்
 
இங்கிலாந்து தலைநகரம் லண்டனில் இருந்து ஜெர்மனியில் உள்ள பிராங்பர்ட்டுக்கு பயணிகள் விமானம் ஒன்று சென்று கொண்டு இருந்தது. இந்த விமானத்தை பைலட், மற்றும் துணை பைலட் ஆகியோர் ஓட்டி சென்றனர். நடுவானில் சென்ற போது துணை பைலட்டுக்கு தாங்க முடியாத தலைவலி ஏற்பட்டது.

அவர் வலியால் துடித்துக் கொண்டு இருந்தார். துணை பைலட் ஒருவர் இருந்தால் தான் விமானத்தை ஓட்டி செல்ல முடியும் என்ற நிலை ஏற்பட்டது. எனவே விமான பயணிகளில் யாராவது விமானம் ஓட்ட தெரிந்தவர்கள் இருந்தால் அவரை துணைக்கு அழைக்க பைலட் முடிவு செய்தார்.

இதனால் விமானத்தை யாராவது ஓட்ட தெரிந்தவர்கள் யாராவது இருக்கிறீர்களா? என அறிவிப்பு வெளியிடப்பட்டது. அப்போது பயணிகளில் ஒருவர் எனக்கு விமானம் ஓட்டத் தெரியும் என்று தெரிவித்தார். அவரிடம் அதற்கான சான்றிதழ்கள் இருந்தன. மற்றொரு விமான நிறுவனத்தில் விமான பைலட்டாக இருந்து வந்தார்.

அவரை துணை பைலட்டாக அமரும் படி பைலட் கேட்டுக் கொண்டார். இதையடுத்து அவர் பைலட்டுடன் சேர்ந்து விமானத்தை ஓட்டி சென்றார். விமானம் பத்திரமாக பிராங்பர்ட்டில் தரை இறங்கியது

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...