Nov 6, 2012

nasa_6 சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தை வெறும் கண்ணால் பார்க்க நாசா ஏற்பாடு
புளோரிடா:பூமிக்கு மேலே சுற்றிவரும், சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தை (ஐ.எஸ்.எஸ்.,)தொலைநோக்கி உதவியில்லாமல், வெறும் கண்ணால் பார்க்க, “நாசா’ ஏற்பாடு செய்துள்ளது.அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட, பல நாடுகள் ஒன்றிணைந்து, பூமிக்கு மேல், 410 கி. மீ.,உயரத்தில்,
சர்வதேச விண்வெளி நிலையத்தை அமைத்துள்ளன.இந்த செயற்கை விண்வெளி நிலையத்தில், விண்வெளி வீரர்கள் தங்கி, ஆய்வு மற்றும் பராமரிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு தேவையான உணவு, தண்ணீர், பிராண வாயு போன்றவை, ரஷ்யா மற்றும் அமெரிக்க விண்கலங்கள் மூலம், சப்ளை செய்யப்பட்டு வருகின்றன.பிரகாசமான இந்த ஐ.எஸ்.எஸ்.,ஒரு நாளைக்கு 15 முறை பூமியை சுற்றி வருகிறது. 450 டன் எடையுள்ள, இந்த விண்வெளி ஆய்வு நிலையத்தை, வெறும் கண்ணால் பார்க்க, அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமாக “நாசா’ ஏற்பாடு செய்துள்ளது.நாசா, இணைய தளத்தில், தங்கள் வீட்டு முகவரியை, பதிவு செய்வோருக்கு, ஐ.எஸ்.எஸ்., அவர் வீட்டருகே பறக்கும் நேரம், எஸ்.எம்.எஸ்.,மூலம் தகவல் தெரிவிக்கப்படும். இதன் மூலம், சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தை, தொலைநோக்கி உதவியின்றி, வெறும் கண்ணால் காண முடியும்.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...