Nov 23, 2012

இரசாயண பொருட்கள் அடங்கிய அழகு சாதனங்களால் ஆபத்து

News Service
இயற்கை அழகை கூடுதலாக அழகு படுத்துகிறேன் என்று கூறி இன்றைக்கு சந்தையில் விற்கும் எண்ணற்ற ரசாயன அழகு சாதன பொருட்களை வாங்கி குவிக்கின்றனர் இளைய தலைமுறைப் பெண்கள். கூந்தலுக்கு உபயோகிக்கும் ஷாம்பு முதல் விரல் நகங்களுக்கு போடும் நெயில்பாலீஸ் வரை அத்தனையும் ரசாயனம்தான். இந்த அழகு சாதனப் பொருட்களினால் ஆபத்துதான் அதிகம் இருக்கிறது என்று எச்சரிக்கின்றனர் நிபுணர்கள். அமெரிக்காவில் உள்ள ஒவ்வொரு பெண்ணும் சராசரியாக 12 அழகு சாதனப் பொருட்களை உபயோகிக்கின்றனராம்.
   இதில் 168 வகையான ரசாயனங்கள் கலக்கப்படுகின்றன. இது உடலுக்குள் ஊடுருவி சருமத்தை பாதிக்கின்றன. கண்களைக் சுற்றி உள்ள பொருட்கள் அதிக சென்சிடிவ் மிக்கவை. அவை காஜல், மஸ்காரா போன்றவைகளினால் பாதிக்கப்படுகின்றன என்கின்றனர் நிபுணர்கள்.
ஐஷேடோவில் 26 விதமான ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றனவாம். அதில் கலக்கப்படும் பாலிதீன் டெரிப்தாலேட் என்ற ரசாயனம் மிகவும்
ஆபத்தை ஏற்படுத்தக்கூடியதாம். இது புற்று நோய், குழந்தையின்மை, ஹார்மோன் கோளாறுகள், உடலின் உள்பாகங்களில் கடுமையான பாதிப்பு போன்றவைகளை ஏற்படுத்துகின்றனவாம். எனவே கண்களுக்கு எந்த வித அழகு சாதனப் பொருட்களும் உபயோகப்படுத்தாமல் இருப்பதே நன்மை தரும் என்பது மருத்துவர்களின் அறிவுரை.
ஷாம்பில் நுரை அதிகம் வரவேண்டும் என்பதற்காக 15 ரசாயனங்கள் வரை கலக்கப்படுகின்றனவாம். அதில் சோடியம் சல்பேட் டெட்ராசோடியம் பாரோபிளின் கிளை சால் போன்றவை ஆபத்தானவை என்கினறனர் மருத்துவர்கள். இதனால் கண் எரிச்சல், மற்றும் பார்வை கோளாறு ஏற்படும் என்று அவர்கள் எச்சரிக்கின்றனர்.
அதேபோல் தலைக்குப் போடும் ஸ்பிரேயில் 11 ரசாயனங்கள் கலந்து வருகின்றன. இதில் ஆக்டிநோசேட், இசோப்தாலேட் ஆகிய ரசாயணங்கள் மிகவும் ஆபத்தானவை. அலர்ஜி, கண் எரிச்சல், மூக்கு, தொண்டையில் எரிச்சல், ஹார்மோன் கோளாறுகள் போன்றவை ஏற்படக்கூடுமாம். இந்த ரசாயனங்களின் மூலம் உடல் செல்களின் வடிவமைப்பு கூட மாறக்கூடிய ஆபத்து இருக்கிறதாம்.
முக அழகிற்குப் போடப்படும் லோஷன்களில் 24 விதமான ரசாயணங்கள் கலக்கப்படுகின்றன. இதிலுள்ள பாலிமெதில்மெதாக்ரைலேட் மிகவும் ஆபத்தானது. இதனால் அலர்ஜி, நோய் எதிர்ப்பு சக்தியில் மாற்றங்கள், புற்றுநோய்க்கான காரணிகள் ஏற்படக்கூடும்.
கன்னத்தில் அழகை அதிகரிக்க உபயோகிக்கும் ரூஜ் 16 வகை ரசாயனங்களை உள்ளடக்கியுள்ளது. இதில் உள்ள எத்தில் பாரபின், மெதில் பாரபின், உள்ளிட்ட ரசாயனங்கள் அதிக ஆபத்தை ஏற்படுத்துமாம். இதனால் கன்னம் சிவந்து போதல், கன்னத்தில் எரிச்சல், ஹார்மோன் கோளாறுகள் போன்றவை ஏற்படும்.
லிப்ஸ்டிக்கில் பாலிமென்தால், மெத்தா க்ரைலேட் உள்ளிட்ட 33 ரசாயனங்கள் உள்ளன. இவற்றில் புற்றுநோயை உருவாக்கும் காரணிகள் அதிகம் காணப்படுகின்றனவாம். அதேபோல் நக அழகுக்காக பயன்படுத்தும் நெயில் பாலிஷ்களில் 31 ரசாயனங்கள் காணப்படுகின்றன. இவை குழந்தையின்மை, குழந்தையை உருவாக்குவதில் குறைபாடுகளை ஏற்படுத்தும் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
வியர்வை நாற்றத்தை போக்க வேண்டும் என்று பயன்படுத்தும் வாசனை திரவியங்களில் 15 விதமான ரசாயனங்கள் கலக்கப்படுகின்றன. அதேபோல் உடலுக்கு போடும் பாடி லோசன்களில் 32 வகையாக ரசாயனங்கள் உள்ளன. இவை கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியவை என்று எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.
தோல், கண்கள் மற்றும் நுரையீரலில் எரிச்சல் ஏற்படுத்தக்கூடியது தலைவலி, மயக்கம், இயங்கும் தன்மையில் மாற்றங்களை ஏற்படும். இதன் மூலம் தோல் தடிப்பு, தோல் நிறமாற்றம், எரிச்சல், ஹார்மோன் கோளறு போன்றவை ஏற்படும். இவற்றை படித்த பின்னரும் அழகு சாதனங்கள் உபயோகிக்கவேண்டும் என்று விருப்பப்படுபவர்கள் ரசாயன கலப்பில்லாத மூலிகை அழகு சாதனப் பொருட்களை உபயோகிக்கலாம் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...