Nov 23, 2012

உணவு கட்டுப்பாட்டில் இருக்கும் போது இரும்புச்சத்துள்ள உணவு உண்ண வேண்டியது அவசியமானது

News Service
உடல் பருமன் அதிகமாக உள்ளது என்பதற்காக, உணவில் மிகவும் கட்டுப்பட்டுடன் இருக்க வேண்டியுள்ளது. அவ்வாறு உடல எடையை குறைக்க டயட்டில் இருக்கும் போது, உடல் ஆரோக்கியத்தையும் பார்த்துக் கொள்ளும் வகையில், உடலுக்கு தேவையான ஒரு சில சத்துக்களை தினமும் உடலில் செலுத்த வேண்டும். அதில் மிகவும் முக்கியமான சத்துக்களான கார்போஹைட்ரேட், புரோட்டீன், வைட்டமின்கள், கொழுப்புகள், இரும்புச்சத்து மற்றும் கால்சியம் போன்றவற்றை தினமும் உடலில் சேர்க்க வேண்டும். அவ்வாறு சேர்த்தால் தான், உடலில் உள்ள உறுப்புகள் அனைத்தும் நன்கு இயங்கும். மற்ற சத்துக்களை சேர்க்கின்றோமோ இல்லையோ, மறக்காமல் இரும்புச்சத்தை சேர்க்க வேண்டும்.
   ஏனெனில் அப்போது தான் உடலில் போதுமான அளவு இரத்த அணுக்களின்
எண்ணிக்கை இருக்கும. இல்லையெனில் அனீமியா போன்ற நோய்க்கு தான் ஆளாக நேரிடும். ஆகவே இப்போது அந்த ஈஸியாக உண்ணக்கூடிய இரும்புச்சத்துள்ள உணவுகள் என்னென்னவென்று பார்ப்போமா!!! டார்க் சாக்லேட்
சாக்லேட்டில் நிறைய நன்மைகள் உள்ளன. அதிலும் 100 கிராம் டார்க் சாக்லேட்டில் 36 மில்லி கிராம் இரும்புச்சத்து அடங்கியுள்ளது. இதனால் வாய்க்கு டேஸ்ட் கிடைப்பதோடு, உடலும் ஆரோக்கியமாக இருக்கும். எனவே தினமும் ஒரு துண்டு டார்க் சாக்லேட் சாப்பிட்டால், இரும்புச்சத்து குறைபாடு ஏற்படாமல் இருக்கும்.
கீரைகள்
உடல் ஆரோக்கியத்திற்கு கீரை ஒரு சிறந்த உணவுப் பொருள். இதில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. அதிலும் 1/2 கப் கீரையில் 3.2 மில்லி கிராம் இரும்புச்சத்து உள்ளது. ஆகவே தினமும் ஏதேனும் ஒரு கீரையை சமைத்து சாப்பிட்டால் நல்லது.
இறைச்சி
அசைவ உணவுகளில் மாட்டுக்கறியில் அதிக அளவு இரும்புச்சத்து அடங்கியுள்ளது. மற்ற இறைச்சியை விட இந்த இறைச்சியின் 100 கிராமில் 2.5-3 மில்லி கிராம் இரும்புச்சத்து உள்ளது. இந்த உணவும் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. முக்கியமாக இந்த உணவை அதிக அளவு சாப்பிட்டால் உடலுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்திவிடும்.
உருளைக்கிழங்கு
உருளைக்கிழங்கில் கார்போஹைட்ரேட் மட்டும் அதிகமாக இல்லை, இரும்புச்சத்தும் தான் அதிகம் உள்ளது. அதிலும் உருளைக்கிழங்கு பிடிக்காதவர்களே இருக்க மாட்டார்கள். ஒரு சாராதண உருளைக்கிழங்கில் 2.5 மில்லி கிராம் இரும்புச்சத்து உள்ளது. ஆகவே இதனை பொரித்து சாப்பிடாமல், வேக வைத்து சாப்பிட்டால், இதன் முழு நன்மையை பெறலாம்.
பூசணிக்காய்
பூசணிக்காயை சமைத்து சாப்பிட்டால், மிகவும் அருமையாக இருக்கும். அதிலும் அதன் விதையின் சுவைக்கு அளவே இல்லை. மேலும் இந்த விதையை தினமும் வறுத்தோ அல்லது பொடி செய்தோ, உணவுகளில் சேர்த்து சாப்பிட்டால், உணவு சுவையாக இருப்பதோடு, உடலும் ஆரோக்கியமாக இருக்கும். மேலும் ஒரு கைப்பிடி பூசணிக்காய் விதையில் 4 மில்லி கிராம் இரும்புச்சத்து உள்ளது.
பருப்பு வகைகள்
பருப்பு வகைகளான பீன்ஸ், அவரை போன்றவற்றில் இரும்புச்சத்து அதிகம் இருக்கிறது. அதிலும் 100 கிராம் பருப்பில் 5 மில்லி கிராம் இரும்புச்சத்து இருக்கிறது. அதிலும் இத்தகைய பருப்பை தினமும் வித்தியாசமான முறையில் சமைத்து சாப்பிட்டால், உடலுக்கு நல்ல ஆரோக்கியம் கிடைப்பதோடு, இரத்த ஓட்டமும் சீராகும்.
சிப்பிகள்
கடல் உணவுகள் உடலுக்கு மிகவும் நல்லது. அதில் ஒன்றான சிப்பிகள்(Oysters) மிகவும் சிறந்தது. அதிலும் 100 கிராம் சிப்பிகளில் 6 மில்லி கிராம் இரும்புச்சத்து உள்ளது. ஆகவே முடிந்த அளவு இதனை வாரத்திற்கு ஒரு முறையாவது சமைத்து சாப்பிட்டால், உடல் நன்கு ஆரோக்கியமாக இருக்கும்.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...