Nov 7, 2012

மீண்டும் அதிபரானார் ஒபாமா : மக்களுக்கு நன்றி தெரிவித்தார்


அமெரிக்க அதிபருக்கான தேர்தலில், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட மிட் ரோம்னியை தோற்கடித்து, பராக் ஒபாமா 2வது முறையாக வெற்றி பெற்றுள்ளார்.
அமெரிக்க அதிபருக்கான தேர்தல் நேற்று நடைபெற்ற நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. அதில், அமெரிக்க அதிபராகத் தேர்வாக தேவையான 270 வாக்குகளை பெற வேண்டிய நிலையில், ஒபாமா 303 வாக்குகளை பெற்று அமெரிக்க அதிபராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 51 வயதான ஒபாமா, அமெரிக்காவின் முதல் கருப்பின அதிபர் என்ற பெருமையைப் பெற்றவர்.
ஒபாமாவை எதிர்த்து போட்டியிட்ட மிட் ரோம்னி 201 வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளார்.
மிட் ரோம்னிக்கும், பராக் ஒபாமாவுக்கும் இடையே கடினமான போட்டி நிலவி வந்த நிலையில், ரோம்னியை விட சுமார் 100 வாக்குகளை அதிகம் பெற்று ஒபாமா மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், தன்னை மீண்டும் அமெரிக்க அதிபராகத் தேர்வு செய்துள்ள நாட்டு மக்களுக்கு இணையதளம் மூலமாக நன்றி தெரிவித்துள்ளார். இரண்டாவது முறையான தன்னை அமெரிக்க அதிபராகத் தேர்வு செய்ததற்கு நன்றி. இன்னும் 4 ஆண்டுகள் எனக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறீர்கள் என்று டிவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...