Nov 7, 2012

உடல் பருமனான நபர்கள் சந்திக்க கூடிய பிரச்னைகள்



உலக சுகாதார நிறுவனத்தின் (WHO)அறிக்கை படி, உலகில் வேகமாக பெருகி வரும் ஆபத்தான சர்க்கரை நோய்க்கு அடுத்த இடத்தில் இருப்பது உடல் பருமன் என்னும் Obesity.இது நேரடியாக இல்லாவிட்டாலும் பல்வேறு நோய்களுக்கு ஆணி வேர் என்பதால், நிச்சயம் அனைவரும் சிறு வயது முதல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது அவசியம்.
நமது சூற்றுபுறச்சூழல், பழக்க வழக்கம், பரம்பரை, உடல்வாகு, உல்லாச நட்பு, உணவுப் பழக்கம், உடற்பயிற்சியின்மையும் உடல் பருமனாவதற்கு முக்கிய காரணம்.
உடல் பருமனால் தேவையில்லாத நோய்கள் நான், நீ என்று போட்டி
போட்டுக்கொண்டு வந்து விடுகிறது.
இதில் முக்கியமாக உயிருக்கு அபாயமான சர்க்கரை நோய், பித்தப்பை கற்கள், இரத்த கொதிப்பு, இதய நோய், ஸ்ட்ரோக், மார்பக புற்றுநோய், குடல் மற்றும் விரைப்பை புற்றுநோய், சிறுநீர் கசிவு, வயிற்றில் ஆசிட் உற்பத்தியால் வரும் GRED என்பவை மிக முக்கியமானவை.
இது மட்டுமல்லாமல் அன்றாட கடமைகளுக்கும் பிறரை சார்ந்து இருக்க வேண்டி இருக்கும். குளிப்பது முதல் ஆடை அணிவது வரை ஏன் செருப்பு கூட போட முடியாத நிலை ஏற்படலாம்.
குண்டான நபர்களுக்கு சரியான ஆடைகளும் கிடைப்பதில்லை. சருமத்தில் அரிப்பு, படை, புண் போன்றவை வரும், நடக்கவும் முடுயாது, வீட்டு வேலைகளை செய்யவும் முடியாது, மாடிப்படியில் ஏறவும் முடியாது. இதற்கும் ஒரு படி மேலாக கணவன் மனைவியரிடையே நாள்தோறும் சண்டை.
வேலை செய்யும் இடத்திலோ, காதுப்பட கிண்டல் கேலிகள் செய்தாலோ வேலைகூட செய்ய முடியாமல் திணறுவர்.
நோய்களும், மன அழுத்தமும் சேர்ந்து உடல் பருமனாக உள்ள ஒருவரை வாழ்க்கையின் எல்லைக்கே கொண்டு போய் விடுகிறது.
எனவே தினமும் சிறிதளவாவது உடற்பயிற்சியும், முழுமையான உடல் கட்டுப்பாடும் மேற்கொண்டால் போதும், உடல் பருமனாகாமல் ஆரோக்கியத்துடன் மகிழ்ச்சியாய் வாழலாம்.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...