Dec 29, 2012

ஒரு நல்ல கண் மருத்துவரிடம் கண்  பரிசோதனைக்கு சென்றால் கீழ்கண்ட பரிசோதனைகள் செய்வது வழக்கம்

முதலில் தூரப்பார்வை மற்றும் கிட்ட பார்வை , படிக்கும் திறன்

இரண்டாவது "Eye Pressure" என்று அழைக்கப்படும் ஒரு முக்கியமான பரிசோதனை குளுகோமா  என்று அழைக்ககப்படும்
இந்த கண் வியாதிக்கு இந்த பரிசோதனை ரொம்ப முக்கியமானது. இந்த வியாதி வருவது தெரியாது. முற்றிய பிறகு தான் தெரிய வரும் அப்போது கண் பார்வை குறைவு ஏற்பட
சாத்தியக்கூறுகள் அதிகம் . ஆப்டிக் நேர்வஸ் என்று அழைக்கப்படும் நுண்ணிய நரம்புகள் கண்ணின் அழுத்தத்தினால் பழுதடையும் சாத்திய  கூறுகள் அதிகம் . அதனால் தான் இந்த பரிசோதனை முக்கியமாக கருதப்படுகிறது

மூன்றாவது ரெடினா பரிசோதனை . இதுவும் முக்கியமானது. ரத்தகொதிப்பு இருக்கும் எல்லோருக்கும் இந்த பரிசோதனை செய்யபடுகிறது . ரத்தகொதிப்பு அதிகரிக்கும் சமயத்தில் விழித்திரை அதாவது ரெடீநா அதன் பிடிப்பிலிருந்து நழுவும் சத்தியக்கூறுகள் அதிகம். அதனால் தான் இந்த பரிசோதனை செய்கிறார்கள்

கண் உடலின் முக்கியமான உறுப்பு வேறு எந்த உறுப்புகளை இழந்தாலும் மனிதன் நார்மலாக உயிர் வாழமுடியும் கண் பார்வை இழந்துவிட்டால் முடியவே முடியாது அதனால் தான் இந்த பரிசோதனைகள் செய்து அதற்குரிய மருந்துகளையும் சொட்டுமருந்துகளையும் தவறாமல் உபயோகிப்பது ரொம்ப அவசியம். என்னுடைய அனுபவத்தில் நான் கண் கூடா கண்டு அறிந்த விஷயங்களை நண்பர்களுடன் பகிர்ந்துகொண்டேன்.  

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...