Aug 28, 2012

பாகிஸ்தான் கணவர் கொடுமை 13 ஆண்டாக தனி அறையில் இந்திய பெண் சிறை வைப்பு



கராச்சி : பாகிஸ்தான்காரரை காதலித்து மணம் முடித்து அந்நாட்டுக்கு சென்ற இந்திய பெண், 13 ஆண்டுகளாக தனி அறையில் சிறை வைக்கப்பட்டுள்ளார். இன்டர்நெட் மூலம் தெரிய வரவே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பாகிஸ்தானைச் சேர்ந்த எலக்ட்ரானிக்ஸ் கடை உரிமையாளர் குல் முகமதுகான். இவர் இந்தியாவுக்கு வந்த போது, குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்த ஷிர்லி ஆன் ஹாட்ஜஸ் என்ற பெண்ணை காதல் மணம் புரிந்தார். இதன்பின், ஷிர்லி தன் பெயரை ஷப்னம் குல்கான் என்று மாற்றிக்கொண்டார்.


இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், பாகிஸ்தானுக்கு போய் தனது உறவினர்களை பார்த்து விட்டு மீண்டும் இந்தியா திரும்பி விடலாம் என்று கூறி, ஷப்னத்தை முகமதுகான் பாகிஸ்தான் அழைத்து சென்றார். கராச்சி வந்தவுடன் தனக்கு முன்பே திருமணமாகி 6 குழந்தைகளும் இருப்பதை முகமது கான் கூறவே, ஷப்னம் அதிர்ச்சியடைந்தார். அதன்பின், வீட்டின் மேல் மாடியில் உள்ள தனியறையில் ஷப்னம் அடைக்கப்பட்டார். அவரது பாஸ்போர்ட் பறிக்கப்பட்டது.

தனி அறையில் சிறை வைக்கப்பட்ட ஷப்னத்துக்கு இன்டர்நெட் கைகொடுத்தது. வீட்டில் யாருக்கும் தெரியாமல் இந்தியாவில் உள்ள தனது குடும்பத்தினரிடம் இன்டர்நெட்டில் ஸ்கைப் சாப்ட்வேர் மூலம் தொடர்புகொள்ள ஷப்னம் தெரிந்து கொண்டார். தனக்கு நேர்ந்த கொடுமையை குடும்பத்தினரிடம் கூறினார். உடனே ஷப்னத்தின் குடும்பத்தினர் இந்திய உள்துறை செயலாளர், இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதர், பாகிஸ்தான் மனித உரிமைகள் ஆர்வலர் ஆகியோருக்கு கடிதம் எழுதினர். இத்தகவலை அறிந்த பாகிஸ்தான் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது போலீசார் தன்னை துன்புறுத்துவதாக முகமதுகான் சிந்து உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இப்போது ஷப்னத்தை மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டு வருகிறது. ஷப்னம் கூறுகையில், எனது திருமணத்தை நினைத்து வருந்துகிறேன். நான் வெளியே வந்ததும் என கணவர் மீது வழக்கு தொடருவேன்'[' என்றார்.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...