Aug 28, 2012

14,000 கி.மீ செல்லும் நவீன ஏவுகணையை பரிசோதித்தது சீனா





பெய்ஜிங் : கண்டம் விட்டு கண்டம் செல்வதும், அணு குண்டுகளுடன் 14,000 கி.மீ., தூரம் பாய்ந்து சென்று தாக்கும் திறன் கொண்டதுமான அதிநவீன புதிய தலைமுறை ஏவுகணையை வெற்றிகரமாக சீனா சோதனை செய்து பார்த்துள்ளது. இதுகுறித்து சீன அரசின் டிவி சேனலில் கூறப்பட்ட செய்தியில், ‘‘சுமார் 14,000 கி.மீ. தூரம் பாய்ந்து செல்லக்கூடிய டோங்பெங்க்,41 ரக ஏவுகணை கடந்த மாதம் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது.


இது அணுகுண்டுடன் கண்டம் விட்டு கண்டம் செல்லக்கூடிய புதிய தலைமுறை ஏவுகணையாகும். இந்த ஏவுகணையில் 10 அணுகுண்டுகளை பொருத்தி அனுப்பி வைக்க முடியும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தியின்போது, சீனாவின் பெண் விஞ்ஞானிகள் குழுவினர் வாகனங்களில் சென்று ஏவுகணையை ஏவுவதற்கான பணிகளை செய்யும் அரிய வீடியோ காட்சியும் ஒளிபரப்பப்பட்டது.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...