Jan 27, 2013

சிட்னிக்கு லண்டனிலிருந்து செல்வதற்கு 90 நிமிடங்களே போதும்!

News Service SpaceLiner எனும் விமான நிறுவனம் தயாரிக்கவுள்ள அதிகூடிய தொழிநுட்பத் திறன் மிக்க Hypersonic விமானத்தில் இலண்டனில் இருந்து சிட்னிக்கு 90 நிமிடங்களில் சென்று விட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த Hypersonic விமானம் ஒலியின் வேகத்தை விட 24 மடங்கு அதிக வேகத்துடன் பயணிக்க வல்லது என்பது குறிப்பிடத்தக்கது. இவ்விமானத்தில் 50 பயணிகள் வரை பயணிக்க முடியும். இவ்விமானத்துடன் பொருத்தப்பட்டுள்ள ராக்கெட்டின் உதவியோடு பூமியின் தரையிலிருந்து 8 நிமிடங்களுக்குள் 50 மைல் உயரத்துக்கு வானில் ஏறக்கூடிய இந்த விமானம்
திரவ நிலை ஆக்ஸிஜனை விமான எரிபொருளாகவும் ஐதரசன் வாயுவை ராக்கெட்டின் எரிபொருளாகவும் உபயோகித்து வானில் பறக்கிறது. விண்கலங்களைப் போலவே இந்த விமானமும் வானில் 50 மைல் உயரத்தை அடைந்த பின்னர் அதன் ராக்கெட்டுப் பாகத்தைக் கழற்றி விடும் எனவும் கூறப்படுகின்றது.
  
தற்போது பரிசோதனைக் கட்டத்தில் உள்ள இந்த விமானத்தின் தயாரிப்பை ஜேர்மனின் வான்பொறியியற் கழகம் (Aerospace Center) மேற்கொண்டு வருகின்றது. மேலும் இந்தத் திட்டம் இன்னும் பத்து வருடங்களுக்குள் தனியார் நிறுவனங்களின் நிதியுதவியை ஈர்க்கக் கூடியது எனவும் அது தெரிவித்துள்ளது. இந்த விமானம் பாவனைக்கு வந்தால் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவுக்கிடையே 60 நிமிடங்களுக்குள் பயணிக்கக் கூடிய சாத்தியம் உருவாகும்.
எனினும் ஆரம்பத்தில் இப்பயணத்துக்கான குறைந்தளவு விமான டிக்கெட் செலவு ஒருவருக்கு ஒரு லட்சம் டொலர்களாக விதிக்கப்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. வானில் சுமார் 15 000 mph வேகத்தில் பயணிக்கக் கூடிய இவ்விமானத்தில் எரிபொருள் தீர்ந்து கழிவாக வெளியேறுவது நீராவி என்பதனால் சுற்றுச் சூழலுக்கு மாசு விளைவதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவையெல்லாவற்றையும் விட முக்கியமான இத்தகவல், இவ்விமானம் பொதுமக்கள் சேவைக்கு வரும் என்றால் அது 2050 இல் தான் சாத்தியமாகுமாம்!

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...