Jan 27, 2013

நீருக்கு அடியில் பாயும் அணு ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக சோதித்தது!



  • 12
     
FILE
வான் வழியே கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து எதிரியின் இலக்குகளை குறி தவறாமல் தாக்கி அழிக்கும் வல்லமையுள்ள அணு ஏவுகணைகளின் சோதனையை இந்தியா பலமுறை வெற்றிகரமாக நடத்தியுள்ளது.
இந்நிலையில், நீர் மூழ்கி கப்பலில் இருந்து ஏவப்பட்டு, நீருக்கு அடியிலேயே பாய்ந்து எதிரிகளின் கப்பலை தாக்கி அழிக்க வல்ல சக்தி வாய்ந்த அணு ஏவுகணையை இந்தியா இன்று வெற்றிகரமாக பரிசோதித்தது.
பி-05 என்ற சங்கேத குறியீட்டுடன் அழைக்கப்படும் கே-15 ரகத்தை சேர்ந்த இந்த ஏவுகணை, 10 மீட்டர் நீளம் கொண்டது. விசாகப்பட்டினம் பகுதியில் உள்ள வங்காள விரிகுடாவில் இன்று நடத்தப்பட்ட சோதனையில் இந்த பி-05 ஏவுகணை 700 கி.மீட்டர் பாய்ந்து சென்று குறிப்பிடப்பட்டிருந்த இலக்கினை வெற்றிகரமாக தாக்கி அழித்தது.
இந்த சோதனை வெற்றிகரமாக நடைபெற்றதையொட்டி, பி-05 ரக ஏவுகணை
விரைவில் இந்திய கப்பற்படைக்கு சொந்தமான ஐ.என்.எஸ். அரிஹண்ட் நீர் மூழ்கி கப்பலில் இணைக்கப்பட உள்ளது.
இவ்வகை ஏவுகணைகள் அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், சீனா போன்ற 4 நாடுகளிடம் மட்டுமே முன்னர் இருந்தன. இந்த வரிசையில் 5வது இடத்தை தற்போது இந்தியா பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...