Jan 4, 2013

டாக்டரின் கைவிரலைப் பிடித்தபடி வெளியே வந்த குழந்தை - இணையத்தில் கலக்கும் அதிசயப் புகைப்படம்!

News Service தனது மனைவியின் பிரசவத்தின் போது எடுக்ப்பட்ட படம் ஒன்றை அவரது கணவர் வெளியிட்டு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். அவரது மகள் பிறந்தபோது, பிரசவம் பார்த்த டாக்டரின் விரலை இறுகப் பற்றியபடி வெளியே வந்ததே இந்த ஆச்சரியத்திற்குக் காரணம். இந்தப் புகைப்படம் இப்போது இன்டர்நெட்டில் படு வேகமாகப் பரவி வருகிறது.
  
அமெரிக்காவின் அரிசோனா, கிளான்டெல் பகுதியைச் சேர்ந்தவர் அலிசியா அட்கின்ஸ். இவருக்கு கடந்த அக்டோபர் மாதம் 9ம் தேதி பிரசவம் நடந்தது. அழகிய மகளைப் பெற்றெடுத்தார். அறுவைச் சிகிச்சை மூலம் குழந்தையை டாக்டர்கள் வெளியே எடுத்தனர். நெவியா என்று குழந்தைக்குப் பெயரிட்டனர். பிரசவத்தின்போது அலிசியாவின் கணவர்
ராண்டியும் உடன் இருந்தார் - கையில் கேமராவுடன்.
மனைவிக்குப் பிரசவம் நடப்பதை அவர் வீடியோவில் பதிவு செய்து கொண்டார். அப்போது திடீரென ஒரு டாக்டர், ராண்டியைப் பார்த்து, உங்களது மகள் எனது விரலைப் பிடிக்கிறாள் பாருங்கள் என்று கூற திரும்பிப் பார்த்தார் ராண்டி. என்ன ஆச்சரியம், அம்மாவிடமிருந்து வெளியே வர ஆரம்பித்துக் கொண்டிருந்த ராண்டியின் மகள், பிரசவம் பார்த்த டாக்டரின் விரலை படு அழகாக, இறுக்கமாக பிடித்தபடி வெளியே வந்து கொண்டிருந்தாள். இந்த காட்சியைக் கண்டு வியந்து போன ராண்டி உடனே அதை படமாக எடுத்தார்.
அந்த படத்தைத்தான் தற்போது ராண்டியும், அலிசியாவும் பேஸ்புக்கில் போட்டுள்ளனர். இந்தப் படம் தற்போது வைரஸ் போல இன்டர்நெட் முழுவதும் பரவி ஏகப்பட்ட பேரால் பார்க்கப்பட்டு வருகிறது.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...