Jan 4, 2013

உலகின் மிகப்பெரிய பணக்காரர்கள் பட்டியல் - முதலிடத்தில் கார்லோஸ்!

News Service உலகின் 100 பெரும் பணக்காரர்கள் பட்டியலை ப்ளூம்பெர்க் பில்லியனர் இன்டெக்ஸ் வெளியிட்டுள்ளது. ப்ளூம்பெர்க் பில்லியனர்ஸ் இன்டெக்ஸ் உலகில் உள்ள பெரும் பணக்காரர்களை பட்டியலிட்டு வெளியிடுவது வழக்கம். அதன்படி அது 100 பேர் கொண்ட உலக பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. 2012ம் ஆண்டில் பணக்காரர்களின் சொத்துக்களின் அடிப்படையில் தான் இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டது.
  
இந்த பட்டியலில் பணக்காரர் என்றால் அனைவரின் நினைவுக்கு வரும் பில் கேட்ஸுக்கு இரண்டாவது இடம் தான் கிடைத்துள்ளது. மெக்சின் டெலிகம்யூனிகேஷன்ஸ் தலைவர் கார்லோஸ் ஸ்லிம் தான் உலகின் நம்பர் 1 பணக்காரர் ஆவார். அவரிடம் 70 பில்லியன் டாலர்களுக்கு அதிகமாக சொத்துக்கள் உள்ளன. அந்த பட்டியலில் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி 18வது இடத்தில் உள்ளார். ஆரக்கிள் கம்பெனி சிஇஓ லாரி எல்லிசன் 8வது இடத்தில் உள்ளார்.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...