Jan 25, 2013

சவுத் ஆப்ரிக்காவில் முதலைகள் ஊருக்குள் புகுந்தது


சவுத் ஆப்ரிக்காவில் உள்ள ஒரு முதலை பண்ணை ஒன்றில் இருந்து 15,000 முதலைகள் ஊருக்குள் புகுந்தன. இதனை பிடிக்க அந்நாட்டு ராணுவ உதவி நாடப்பட்டுள்ளது. சவுத் ஆப்ரிக்காவின் வட பகுதியில் அமைத்துள்ளது ரக்வேநா முதலை பண்ணை. இந்த முதலை பண்ணையில் பல ஆயிரம் முதலைகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இங்கு அண்மையில் பெய்த புயல் மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் ரக்வேநா முதலை பண்ணையில் உள்ள அவசர கதவை திறக்கும் கட்டாயம் ஏற்ப்பட்டது.
இதனால் முதலை பண்ணையில் உள்ள வடிகால் வழியாக 15,000 முதலைகள் ஆற்றுக்குள் புகுந்துள்ளன. இதுவரை சுமார் 8000 முதலைகள் வரை பிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாதிக்கும் மேற்ப்பட்ட முதலைகளை பிடிக்க அந்நாட்டு ராணுவம், காவல்துறை மற்றும் உள்ளூர் மக்கள் உதவி நாடப்பட்டுள்ளது. பல முதலைகளை ரக்வேநா முதலை பண்ணை இருக்கும் இடத்தில இருந்து சுமார் 120 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இடங்களில் பிடித்துள்ளனர். இந்த முதலைகள் எவ்வளவு தூரம் பயணித்துள்ளது , வேறு எங்கெல்லாம் மறைந்து உள்ளது என்பதை கண்டறிய நீண்ட கால அவகாசம் எடுக்கும் என தெரிகிறது. இதனால் நதிகரை ஓர கிராம மக்கள் கலக்கத்தில் உள்ளனர்.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...