Jan 7, 2013

இனி பேஸ்புக்கில் நண்பர்களுடன் இலவசமாக பேசலாம்


உலகின் மூலையில் உங்கள் நண்பர்கள் எங்கிருந்தாலும், தற்போது பேஸ்புக் அப்ளிக்கேஷன் உதவியுடன் அவர்களிடம் இலவசமாக பேசலாம்.

நண்பர்களுடன், அவர்கள் எந்த நாட்டிலிருந்தாலும், இலவசமாக உரையாடக்கூடிய வசதியினை சமூக வலைதளமான பேஸ்புக் விரைவில் ஆரம்பிக்க உள்ளது.

பேஸ்புக்கின் ஐபோன் அப்ளிகேஷனான மெஸேன்ஜசரில் தற்போது இந்த வசதி செய்யப்பட்டு, கனடா நாட்டில் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பேஸ்புக் வலைத்தளத்தில் இருக்கும் நண்பர்களுடன் எந்த நாட்டிலிருந்தாலும் இலவசமாக பேசிக் கொள்ளலாம்.

தற்போது ஐபோனில் உள்ள பேஸ்புக் மெஸேன்ஜர் அப்ளிகேஷனில், நாம் பேசி அதனைப் பதிந்து குரல் அஞ்சலாக அனுப்பும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. மெஸேன்ஜர் அப்ளிகேஷனில் உள்ள + குறியினை அழுத்தி நாம் பேசுவதை பதிந்து அனுப்பும் சுலப யுத்திகளும் அதில் உள்ளது.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...