Feb 10, 2013

தூங்கும் குழந்தையை இழுத்துச் சென்ற நரி
[ ஞாயிற்றுக்கிழமை, 10 பெப்ரவரி 2013,
தென்கிழக்கு இலண்டனில் உள்ள புரோம்லீயி(Bromley) என்ற இடத்தில் ஒரு வீட்டிற்குள் புகுந்த நரி ஒரு மாதக் குழந்தையை கட்டிலிருந்து இழுத்துச் சென்ற கோர சம்பவம் நடந்துள்ளது.குழந்தையின் அறையிலிருந்து அலறல் குறல் கேட்டதும் பயந்துபோன தாய் ஓடிச்சென்று பார்த்தபொழுது குழந்தையின் கையைக் கவ்வியவாறு நரி சென்று கொண்டிருந்தது. ஓடி வந்த தாய் அதை எட்டி உதைத்தவுடனே நரி அந்தக் குழந்தையை அங்கேயே விட்டுவிட்டு ஓடிவிட்டது.
கடந்த புதன்(6ம் திகதி) மாலை 4.30 மணியளவில் குழந்தையை செயிண்ட் தாமஸ் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளனர். அம்மருத்துவமனையிலிருந்து மாநகர் காவல்துறைக்குத் தகவல் சென்றுள்ளது.
நரியின் வாயில் குழந்தையின் கை சிக்கியதில் விரல்கள் சேதமடைந்துள்ளதால் அறுவை சிகிச்சை தேவைப்படுவதாக ஊடகத்தினர்
தகவல் வெளியிட்டுள்ளனர்.
இதே போல் கடந்த 2010ம் ஆண்டில் கிழக்கு இலண்டனில் உள்ள ஹேக்னி(Hackney) நகரில் உள்ள ஒரு வீட்டிற்குள் புகுந்த நரி இரட்டைப் பெண் குழந்தைகளை இழுத்துச் சென்றது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...