Feb 10, 2013

பிரான்ஸ் அதிபர் பிப்ரவரி 14-ல் இந்தியா வருகை

புதுடெல்லி,பிப்.10-
 
பிரான்ஸ் அதிபர் பிப்ரவரி 14-ல் இந்தியா வருகைபிரான்ஸ் அதிபர் பிரான்கோஸ் ஹோலண்டே 2 நாள் சுற்றுப் பயணமாக பிப்ரவரி 14-ந்தேதி இந்தியா வருகிறார்.
 
பிரதமர் மன்மோகன் சிங்கின் அழைப்பை ஏற்று அவர் இந்தியா வருகிறார். அவருடன் பிரஞ்சு அரசின் முக்கியப் பிரதிநிதிகள், முக்கிய மந்திரிகள், உயர் அதிகாரிகள் மற்றும் தொழில் அதிபர்களும் வருகிறார்கள்.
 
இவர் இந்தியாவின் முக்கியப் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி, எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் ஆகியோர் மரியாதை நிமித்தமாக பிரெஞ்ச் அதிபரை சந்திக்க உள்ளனர்.
 
பிப்ரவரி 15-ம்தேதி நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகமுமான தீன் மூர்த்தி மகாலில் உரையாற்ற உள்ளார். மேலும், நோபல் பரிசு பெற்ற 'அமர்தியா சென்'னை கௌரவிக்கும் விதமாக பிரான்சின் உயரிய லிஜின் ஆப் ஹானர் விருதையும் வழங்க உள்ளார். மும்பையில் நடைபெறும் வணிக மாநாட்டில் அவர் கலந்துகொள்ள இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...