Feb 23, 2013

பனிப்புயல் தாக்குதல் சிகாகோவில் 270 விமானங்கள் ரத்து


கான்சாஸ் சிட்டி: அமெரிக்கா மீண்டும் பனிப்புயல் தாக்கியது. வடகிழக்கு திசை நோக்கி வீசும் பனிப்புயலால் மின்னசோட்டா மாகாணம் முதல் ஒஹியோ மாகாணம் வரை உள்ள பகுதிகளில் பனி படர்ந்துள்ளது.கான்சாஸ் நகரில் 30.5 செ.மீ. உயரத்துக்கு பனி படர்ந்தது. இதனால் கான்சாஸ் சர்வதேச விமான நிலையத்தில் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டன. சாலை போக்குவரத்து பாதிப்படைந்தது.சிகாகோ நகரில் உள்ள 2 விமான நிலையங்களில் 270 விமானங்களும், செயின்ட் லூயிஸ் மாகாணத்தில் உள்ள லாம்பர்ட் விமான நிலையத்தில் 320 விமானங்களும் ரத்து செய்யப்பட்டன.இந்த வார இறுதியில் இப்பனிப்புயல் அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை பகுதியை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது நியூ இங்கிலாந்து பகுதிகளில் ஏராளமான பனிப்பொழிவை ஏற்படுத்தும் என்று அஞ்சப்படுகிறது.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...