Feb 23, 2013

திருப்பதி வெங்கடாஜலபதியின் உருவத்துடன் கைக்கடிகாரம்! சுவிஸ் நிறுவனம் அசத்தல்



  • 2
     


watch_tripathiஆந்திராவில் சித்தூர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற திருப்பதி வெங்கடேசப் பெருமாள் கோவில், வைணவர்கள் போற்றும் 108 திவ்ய தேசங்களில் 2-ம் இடத்தில் உள்ளது.
மிகவும் செல்வாக்கு மிகுந்த கடவுளாக திகழும் இந்த திருப்பதி வெங்கடாஜலபதியின் தரிசனம் எப்போதும் கிடைக்க வேண்டும் என்றே அவரது பக்தர்கள் விரும்புவார்கள்.
அவர்களின் ஆவலை நிறைவேற்றும் வகையில் சுவிட்சர்லாந்து நிறுவனம் அழகான, ஆடம்பரமான கைக்கடிகாரத்தை அறிமுகம் செய்துள்ளது.

இந்த வாட்ச் அறிமுக விழா மற்றும் விற்பனை, ஐதராபாத்தில் உள்ள ஒரு ஓட்டலில் நடந்தது.
இதுகுறித்து செஞ்சுரி நிறுவன தலைவர் பிலிப் நிருபர்களிடம்,”செஞ்சுரி வாட்ச் நிறுவனம் சார்பில் ஏழுமலை சுவாமி மற்றும் ஆனந்த நிலையம் (தங்க கோபுரம்) உருவம் பொறிக்கப்பட்ட கைக்கடிகாரம் விற்பனைக்கு வந்துள்ளது. பெங்களூரில் உள்ள ரேடியோ ட்ரைவ் நிறுவனத்துடன் இணைந்து இந்த கைக்கடிகாரம் தயாரிக்கப்பட்டுள்ளது.
ஒரு கைக் கடிகாரத்தின் விலை ரூ.27 லட்சம். தற்போது 333 கைக்கடிகாரங்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே செஞ்சுரி நிறுவனம் மூலம் ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.2 கோடி வரை விலையுள்ள கைக்கடிகாரம் தயாரிக்கப்பட்டு விற்பனையில் உள்ளது.
இந்த கைக்கடிகாரம் விற்பனை மூலம் வரும் குறிப்பிட்ட தொகை திருப்பதி தேவஸ்தானம் கட்டுப்பாட்டிலுள்ள மருத்துவமனைக்கு வழங்கப்படும்.”என்று பிலிப் கூறினார்.
இதற்கிடையில் இந்த கைக்கடிகாரம் வெளியிட்டு விழாவின் போது அங்கு வந்த விஸ்வ இந்து பரிஷத், பஜ்ரங் தள அமைப்பினர், ஏழுமலையான் சுவாமி படத்தை வியாபார நோக்கில் பயன்படுத்தும் தேவஸ்தான நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை பொலிசார் விரட்டியடித்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...