Feb 14, 2013

முதன்முறையாக பாறையில் துளையை ஏற்படுத்தி ஆராய்ச்சி செய்கின்றது கியூரியோசிட்டி!

முதன்முறையாக பாறையில் துளையை ஏற்படுத்தி ஆராய்ச்சி செய்கின்றது கியூரியோசிட்டி!

News Service செவ்வாய்க்கிரகத்தின் தரை மேற்பரப்பில் தங்கி அதனை ஆய்வு செய்து வரும் ரோபோட்டிக் விண்வண்டியான கியூரியோசிட்டி சமீபத்தில் முதன் முறையாக ஒரு பாறையைத் துளைத்து அதில் இருந்த் வெளியேறும் தூசிகளை சேகரித்து பரிசோதனை செய்துள்ளது. இது தனது ரோபோட்டிக் கையின் முனையில் உள்ள டிரில்லர் மூலம் செவ்வாயிலுள்ள நடுத்தரப் பாறையொன்றில் 1.6cm விட்டமும் 6.4cm ஆழமும் உள்ள துளையினை ஏற்படுத்தி தூசுத் துகள்களை சேமித்தது. இந்தப் பரிசோதனை குறித்து ஜோன் க்ருன்ஸ்ஃபெல்ட் எனும் கியூரியோசிட்டி செயற்திட்ட உறுப்பினர் ஒருவர் கருத்துரைக்கையில், 'இதுவரை விண்வெளியில் உள்ள வேற்றுக் கிரகமொன்றில் இறங்கி சுயமாகப் பரிசோதனை செய்து வரும் ரோபோக்களிலே மிகுந்த தரமுடையதும் உயர் தொழிநுட்ப வசதிகள் உடையதுமான விண்வண்டியான கியூரியோசிட்டி
அதன் அதிகபட்ச செயற்திட்டமாக செவ்வாயின் பாறைகளைத் துளைத்து பரிசோதனை மேற்கொள்கிறது.' என்றார்.
  
மேலும் கியூரியோசிட்டியின் செயற்பாடுகளில் முக்கியமான மைல்கல் இதுவெனவும் கூறப்படுகின்றது. தற்போது கியூரியோசிட்டி துளையிட்டு ஆராய்ந்து வரும் பாறையில் இதற்கு முன்னர் செவ்வாயில் உயிர் வாழ்க்கைக்குப் பங்களிக்கக் கூடிய ஈரப்பதன் மிகுந்த தன்மை காணப்படுகின்றதா எனத் தேடப் படுகின்றது. இப்பாறைக்கு 2011 இல் மரணமடைந்த செவ்வாய்க்கிரக ஆராய்வுக்கான விஞ்ஞான கூடத்தின் பிரதி செயற்திட்ட உறுப்பினரான ஜோன் க்லெயின் என்பவரின் பெயர் அவரைக் கௌரவிக்கும் விதத்தில் இடப்பட்டுள்ளது.
தற்போது கியூரியோசிட்டியால் சேகரிக்கப் படும் தூசு மாதிரிகளை பரிசோதனை செய்வதற்கான ஆணை அதன் ரோபோட்டிக் கைக்கு இன்னும் சில தினங்களில் சென்றடையுமாறு பூமியில் இருந்து அதன் கட்டுப்பாட்டாளர்களால் அனுப்பப் படவுள்ளது. இதேவேளை செவ்வாயில் இப்பரிசோதனை வெற்றிகரமாக நிகழ்வதற்காக ஏற்கனவே பூமியில் 8 டிரில்கள் தயாரிக்கப் பட்டு பூமியில் உள்ள 20 வகையான பாறைகளில் 1200 துளைகள் இட்டுப் பரிசோதிக்கப் பட்டதாக பொறியியலாளர்கள் கூறுகின்றனர்.
கியூரியோசிட்டியின் செயற்திட்டத்துக்கான செலவு $ 2.5 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும். இன்னும் இரு வருடங்களுக்கு வெற்றிகரமாக இச் செயற்திட்டத்தை நீட்டிப்பதற்கு விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர். மேலும் இதன் பிரதான நோக்கம் எதிர்காலத்தில் மனிதன அங்கு விஜயம் செய்வதற்கு ஏற்ற வகையில் அங்கு சூழல் இருக்கின்றதா என உறுதிப் படுத்துதல் ஆகும். இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஒபாமா 2030 இல் செவ்வாய்க்கு மனிதர்களை அனுப்புவதற்கான திட்டத்தை ஏற்கனவே வகுத்துள்ளார் எனவும் கூறப்படுகின்றது.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...