Feb 14, 2013

கறிவேப்பிலையை ஏன் தாளிக்கிறோம்..? - கேரளா பல்கலைக்கழக மருத்துவக் குழுவினர் ஆய்வு!

கறிவேப்பிலையை ஏன் தாளிக்கிறோம்..? - கேரளா பல்கலைக்கழக மருத்துவக் குழுவினர் ஆய்வு!
[Wednesday, 2013-02-13
News Service கறிவேப்பிலையை எண்ணெயுடன் சேர்த்து (Lipophilic) சாப்பிடும்போது அதன் வேதிப்பொருட்கள் முழுமையாக உடலைச் சென்றடையும். கறிவேப்பிலையைத் தாளிதம் செய்யும்போது மிக லேசாக எண்ணெயில் வதக்க வேண்டும். இல்லை எனில் இதில் உள்ள பீட்டா கரோட்டின் ஆவியாகி பலன் இல்லாமல் போய்விடும். 'கறிவேப்பிலையையும் கடுகையும் ஒன்றாகச் சேர்த்து தாளிப்பதினால் நன்மை உண்டா?' என்பதுகுறித்து திருவனந்தபுரத்தில் உள்ள கேரளா பல்கலைக்கழக மருத்துவக் குழுவினர் ஆய்வு செய்தனர்.
  
இதில் கறிவேப்பிலையும் கடுகும் இணைந்து உடலில் உள்ள திசுக்களை அழிவில் இருந்து பாதுகாப்பதாகவும் நச்சுத் தன்மையை ஏற்படுத்தும் ஃப்ரீ ராடிக்கல்ஸ் (Free radicals) உருவாவதைத் தடுப்பதாகவும் கண்டுபிடித்து உள்ளனர். உடல் எடையை அதிகரிக்க விரும்புபவர்கள் கறிவேப்பிலையும் பொட்டுக்கடலையும் சம பங்கு கலந்து, பொடியாக்கிப் பசு நெய் அல்லது நல்லெண்ணெய் சேர்த்து சாப்பிட்டுவரலாம்.
இனிமேலாவது, கறிவேப்பிலையைத் தூக்கித் தூர எறிந்துவிடாமல் நன்றாக மென்று சாப்பிடுங்கள்!

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...