Apr 27, 2013

முன்னர் கருதியதை விட 1000 டிகிரி அதிகமாகக் காணப்படும் புவி மைய வெப்பம்!




News Service பூவியின் உள்ளகமான (core) என்று அழைக்கப் படும் அதி ஆழமான பகுதியில் எரிமலைக் குழம்பு போல் வெப்பமான லாவா காணப்படுகின்றது. இதன் வெப்பநிலை முன்னர் அதாவது 1990 ஆண்டு முதல் 5000 டிகிரி எனக் கருதப் பட்டு வந்தது. ஆனால் சமீபத்தில் நவீன ஆய்வுகளின் மூலம் இது தவறு என்றும் இதன் உண்மையான வெப்பநிலை இன்னமும் 1000 டிகிரி அதிகம் அதாவது 6000 டிகிரி என விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர். இதில் ஆச்சரியாமன இன்னொரு விடயம் என்னவென்றால் இந்த உள்ளக வெப்பநிலையான 6000 டிகிரி சூரியனின் மேற்பரப்பு வெப்பநிலைக்குச் சமனானது என்பதாகும். எக்ஸ் ரே (X-ray) கதிர்களைப் பயன்படுத்தி இரும்புத் துகள்களை அதி அழுத்தத்தில் வெப்பமாக்கி அது எவ்வாறு உருகி லாவா ஆகின்றது எனப் பரிசோதிக்கப் பட்டது.
  
ஏனெனில் பூமியின் மையப் பகுதியில் சந்திரனின் விட்டத்துக்குச் சமனான கோளப் பகுதி திண்ம இரும்புப் பந்து போல் உள்ளது. இதனைச் சுற்றி மிக இயங்கு தன்மை மிக்க திரவ இரும்பு மற்றும் நிக்கலின் கலவையினால் காணப்படுகின்றது. 1990 ஆண்டுகளில் மேற்கொள்ளப் பட்ட பரிசோதனைகளின் போது இந்த இரும்பு உருகும் வெப்பநிலை 5000 டிகிரி என முடிவெடுக்கப் பட்டது.
எனினும் சமீபத்தில் ஐரோப்பாவின் சின்க்ரோட்ரோன் கதிர்வீச்சு கூடத்தில் அதே பரிசோதனை இன்னும் அதிக திறனுடைய X-ray இனைப் பயன்படுத்தி மேற்கொள்ளப் பட்டது. இதன் போது இது திருத்தமாக 6000 டிகிரி என்பது ஊர்ஜிதமானது. தற்போது இந்தப் பரிசோதனை முடிவு புவிப் பௌதிகவியலாளர்கள், நிலநடுக்க ஆய்வாளர்கள், புவியியக்கவியலாளர்கள் ஆகியோருக்கு மிக உபயோகமாகப் பயன்படவுள்ளது என்பதுடன் அவர்களின் கணணி மாதிரிகளிலும் இது திருத்திப் பதிவிடப்படவுள்ளது.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...