Apr 27, 2013

இன்று பூமிக்கு அருகே வருகிறது சனிக் கிரகம்!


பூமிக்கு அருகே வருகிறது சனிக் கிரகம்! பூமிக்கு அருகில், சனிக்கோள் வர உள்ளது. இந்நிகழ்வு, ஏப்.28 நிகழ உள்ளது. சூரிய குடும்பத்தில் ஒரு அங்கம்,சனிக்கோள். சூரியனுக்கு அருகில், சனிக்கோள் வரும் போது,அதை பார்க்க முடியும். இன்று, 28ம் திகதி, சூரியனுக்கு எதிராக சனிக்கோள் வருகிறது.

சாதாரணமாக, பூமி, சனி இடையே உள்ள தூரம், 142.7 கோடி கி.மீட்டர். சில நேரங்களில்,சனிக்கோள், பூமியிலிருந்து, 125 கோடி கி.மீட்டர் தூரத்திற்கு வரும். தற்போது, சூரியனுக்கு எதிராக, சனிக்கோள் வருகிற நேரத்தில், பூமியில் இருந்து, 132.2 கோடி கி.மீட்டர் தூரத்தில் இருக்கும். இந்த நிகழ்வின் போது, சனிக்கோள், அதன் துணை கோள்கள் மற்றும் சனிக்கோளின் வளைவுகளை பார்க்க முடியும்.

கடந்த ஆண்டு, ஏப்.4ம் திகதி, அதுபோல், சனிக்கோள் பூமிக்கு அருகில் வந்தது.வரும், 28ம் தேதி முதல், 12 நாள்கள் இந்த நிகழ்வு தொடரும். வெறும் கண்ணால் இந்நிகழ்வை பார்க்கலாம். ஆனால், பிரகாசமான பொருளாக தான் சனிக்கோள் தெரியும். சனிக்கோளின் உட்கூறுகள் போன்றவற்றை, தொலைநோக்கியில் தான் பார்க்க முடியும். இது போன்ற நிகழ்வு, மீண்டும், 2014, மே, 10ம் தேதி, நடைபெற உள்ளது. சனிக்கோள், பூமிக்கு அருகில் வருவதால், எந்தவித பாதிப்பும் கிடையாது.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...