Apr 25, 2013

இன்னும் எத்தனை உயிர்களை 'தீ'க்கு கொடுக்கப்போகிறோம். அலட்சியம், லாப வெறி, ஊழல் எல்லாம் சேர்ந்து வாழும் அடிப்படை உரிமையை பறிக்கின்றது.

110கோடி மக்கள் இருப்பதாலோ என்னமோ மனித உயிர்கள் மலிவாகப்போய்விட்டன இங்கே, கும்பகோணம் தீவிபத்து, ஸ்ரீரங்கம் தீவிபத்து என தொடர்ந்து தீவிபத்துகள் என்ற பெயரில் நடப்பவைகள் எல்லாம் அலட்சிய கொலைகளே, இன்று அந்த அலட்சிய கொலைகள் வரிசையில் கோவை வணிக வளாக தீவிபத்து.

கோவையில் இன்று வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் இரு பெண்கள் உள்டப 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஏராளமானோர் காயமடைந்துள்ளனர். கோவை-அவினாசி சாலையில் உள்ள லட்சுமி மில் அருகே 4 மாடி கொண்ட சேரன் பிளாசா என்ற வணிக வளாகம் உள்ளது. இதில் பிடித்த தீயில் பலர் படுகாயம் அடைந்தனர், இரண்டு பெண்கள் உட்பட நான்கு பேர் தீயில் கருகி இறந்தனர்.

மேலை நாடுகளிலும் முன்னேறிய நாடுகளிலும் இப்படியான தீவிபத்துகள் நிகழ்ந்தாலும் கூட உயிர்பலி என்பது மிக மிகக்குறைவே, ஏனெனில் கட்டிடத்தை சுற்றிலும் ஃபயர் எஞ்சின் அக்சஸ் ஏரியா என கட்டிடத்தின் அனைத்து பகுதிகளிலும் ஃபயர் எஞ்சின் செல்லக்கூடிய அளவு இடம், கட்டிடத்தினுள் தீயை அணைக்க கூடிய கருவிகள், அவைகள் வேலை செய்கிறதா என்று அடிக்கடி செக்கிங்க, மேலும் ஆண்டுக்கு இரண்டு முறையாவது ஃபயர் டிரில் என பல விசயங்கள் இருக்கும், கட்டிடத்தினுள் கூட வணிக வளாகங்களில்ஃபயர் அக்சஸ் ஏரியாவில் கடை போட்டிருந்தாலோ பொருட்களை அடுக்கி வைத்திருந்தாலோ வணிக வளாகத்தையே சீல் வைத்துவிடுவார்கள் 

ஆனால் தீயணைப்பு வண்டிகள் நிற்கவும் கூட இடமில்லாத அளவுக்கு நெருக்கமான கட்டிடங்கள், தீ என்று வாளியில் எழுதி வாளியில் ஒன்றுமே இல்லாமல் மாட்டி வைத்து இருப்பது, ஃபயர் டிரில் என எதுவுமே செய்யாமல் கிடைக்கும் ஒவ்வொரு அடி இடத்தையும் வாடகைக்கு விட்டு லாப வெறியில் இருப்பதுவும் தீப்பிடித்தால் தப்பிக்க ஏதுவான எந்த வழிகளும் இல்லாத கட்டிடங்களுக்கெல்லாம் லஞ்சம் வாங்கிக்கொண்டு அனுமதி அளிப்பதும் உயிர்வாழ வேண்டிய அடிப்படை உரிமையை பறிக்கின்றன இந்த லாபவெறியும், லஞ்சமும்.

#என்று தணியும் இந்த 'தீ' விபத்துகளின் தாகம்.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...