May 9, 2013

காதுகளுக்குள் சுரக்கும் கருஞ்சிவப்பான திரவத்தை அகற்றுதல் நல்லதல்ல!


News Serviceபொதுவாகவே நாம் நமது உடல் உறுப்புகளைப் பராமரிப்பதில் அலட்சியம் செய்கிறோம். அதுவே பல உடல் உபாதைகளுக்கும் காரணமாக அமைந்து விடுகிறது. அதில் குறிப்பிடத்தக்க இடத்தில் இருப்பது காது. காது குடாய்வதை பலரும் ஒரு அன்றாட பழக்கமாகவே வைத்திருப்பார்கள். காதின் ஓட்டைக்குள் போகும் அளவுக்கு எந்த ஒரு பொருள் கிடைத்தாலும் அதைக் கொண்டு காதை குடைவார்கள்.
   பெரியவர்கள் என்றால் பரவாயில்லை.. சிறிய குழந்தைகளுக்கு காதுகளைப் பற்றி என்ன தெரியும். அவர்கள் செய்யும் சில காரியங்கள் காதுகளை வெகுவாக பாதித்து விடுகின்றன.
ஒரு காது மருத்துவ நிபுணர் தனது அனுபவத்தை பகிர்ந்து கொள்ளும் போது, சிறுவர்களின் காதுகளில் ஏதேனும் பிரச்னை என்று என்னிடம் அழைத்து வரும் போது, அவர்களது காதுகளில் இருந்து சிறிய பட்டன், செல்பேசியின் கீஸ், பல், மணி என எத்தனையோ விஷயங்களை எடுத்திருக்கிறோம்.
சில குழந்தைகளின் காதுகளில் பூண்டு, பூண்டு தோல் ஆகியவையும் இருந்துள்ளன. இதற்குக் காரணம் என்ன என்று கேட்டால், பூண்டு காதுக்கு நல்லது என்று சொன்னார்கள்
என்று பெற்றோர் சொல்வதுண்டு.
காது என்பது மிகவும் அரிதான உடல் பாகமாகும். அது தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்ள அனைத்து விதமான தற்காப்பு வித்தைகளையும் தெரிந்து வைத்திருக்கிறது. அதனை தேவையில்லாமல் நாம் நோண்டி புண்ணாக்கிக் கொள்ள வேண்டாம் என்பதே மருத்துவரின் அறிவுரையாகும்.
காதுகளுக்குள் ஏதேனும் பூச்சிகள் சென்றால் கூட, அவை காதுக்குள் இருக்கும் கருஞ்சிவப்பான திரவத்தில் ஒட்டிக் கொள்ளும். அதன் சுவை மிகவும் கசப்பானது என்பதால், பூச்சிகள் உடனே செத்துவிடும். காதுகள் பாதுகாப்பாக இருக்க இயற்கையாகவே சுரக்கும் சுரப்பியை நாம் காதுகளை சுத்தம் செய்கிறோம் என்று கூறி அகற்றிவிடுவது நியாயமா?
மேலும், காதுகளை அவ்வப்போது சுத்தம் செய்வதற்காக, தானாகவே காதுகளில் பழைய தோல் உதிர்ந்து, புதிய தோல் உருவாகிறது. இவ்வளவையும் காதுகளே செய்து கொள்ளும் போது, அதனை அப்படியே விட்டுவிட்டு நம் வேலையை பார்ப்பதுதான் காதுக்கும், நமக்கும் நல்லது

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...