Jun 20, 2013

வெள்ளரிக்காயின் சிறப்பு மற்றும் மருத்துவ குணம்

வெள்ளரிக்காயை நம்மில் சாப்பிடாதவர்கள் சிலர் தான் இருப்பர். மிக குறைந்த விலையில் உடல்நலத்திற்கு ஏற்றது. வெள்ளரியை மூன்று வகையாக பிரிக்கலாம்.
பிஞ்சு வெள்ளரிக்கா
ய்ச்சையாக சாப்பிடுவதற்கு ஏற்றது. இதில் விதைகள் சிறிதாக இருக்கும் இதனால் சாப்பிடவதற்கு சுவையாகவும் இருக்கும். இதை சாப்பிடும்போது கொஞ்சம் உப்பு, மிளகாய்த்தூள், மிளகு தூள் கலந்து சாப்பிட்டால் இதன் சுவை சொல்லிமளாது. அப்படியே சாப்பிடுவதற்கு ஏற்றது இதுதான். வெள்ளரி வாங்கும் போது பிஞ்சு வெள்ளரியாக பார்த்துவாங்க வேண்டும்.
வெள்ளரிக்காய்
இது பிஞ்சுக்கும் அடுத்தநிலை. இதை குழம்பு வைக்க பயன் படுத்தலாம். இதை வைத்து பழ வகை குழம்பு வைக்கலாம்.
வெள்ளரிபழம்
வெள்ளரி நன்கு பழத்து இருக்கும் பெரியதாகவும் இருக்கும். பழத்தை ஜூஸ்
செய்து சாப்பிட ஏற்றது. இல்லை எனில் நாட்டுச்சக்கரை கலந்து அதனுடன் பழத்தை சேர்த்து சாப்பிடலாம். வெப்ப காலத்தில் உடலுக்கு அதிக குளிர்ச்சியைத் தரும்.
வெள்ளரியின் பயன்கள்:
விட்டமின் ஏ, பொட்டாசியம் அதிகம் உள்ளது
சிறுநீர் பிரியாமல் அவதிபடுபவர்கள், நீரிழிவு நோயாளிகள் வெள்ளரிக்காய், வெள்ளரி விதை சாப்பிட உடனடி நிவாரணம் கிடைக்கும்.
வெள்ளரிக்காய் சாறை கண்களை சுற்றி தடவி சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். வாரம் ஒரு முறை இவ்வாறு செய்ய கருவளையம் நீங்கும்.
வெள்ளரிக்காயை நறுக்கி கண்களின் மேல் சிறிது நேரம் வைத்திருந்தாலும் கருவளையம் மறையும்.
உடலுக்கு குளிர்ச்சியைத் தந்து சிறுநீர் வெளியேற உதவும்.
கண் பொங்குதல், உடல் சூடு, மலக்கட்டு, தீர்க்கும் உயர்ந்த உணவு
கடல் உப்பை உடலில் குறைக்கும் உணவு.
சீறுநீரக எரிச்சல், கல் அடைப்பு, மூலச்சூடு, மூலவியாதிகள் ஒரு வாரத்தில் சரியாகும்.
உடல் பருமன், உடல் தொப்பை, மூட்டுப் பிணிகள், வலிமைகளை குறைத்திடும் இரத்த அழுத்தம்.
நீரிழிவு நோயாளிகளுக்கு அவசிய உணவுச் சாறு.
நீரிழிவு பிணியாளர்களின் மருந்துகளைக் குறைப்பதில் வெள்ளரிச்சாறு விடிவெள்ளியாய் இருக்கிறது

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...