Jun 20, 2013

அதிகாலையில் கண் விழித்தால் மெல்லிய உடல் பெறலாம் (Slim)

அதிகாலையில் கண் விழிப்பவா்கள் மகிழ்ச்சியாகவும், ஆராக்கியமாகவும் ஸ்லிம்மாகவும் இருப்பார்கள் என்று சமீபத்தில் ஆய்வு ஒன்று தெரிவித்தள்ளது.
ரோகாம்டன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள்  மேற்கொண்ட ஆய்வில், அதிகாலையில் எழும்புவர்கள் தங்களுக்கான வேலையை சுறுசுறுப்பாகச்  செய்வதோடு தங்கள் குழந்தைகளையும் பள்ளிக்கு விரைவாக  அனுப்பி வைப்பார்கள் என்று  கூறியுள்ளனா். இரவு ஆந்தைகளைப் போல விடிய விடிய வேலை பார்ப்பவர்கள் மன அழுத்தத்தினாலும், உடல் பருமனுடனும் இருப்பார்கள் என்று  கூறுகின்றது அந்த ஆய்வு முடிவு.
அதிகாலையில் சீக்கிரம் கண் விழிப்பவர்கள் தாமதமாக கண் விழிப்பவர்களை விட ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இலேசான உடல்வாகு கொண்டவர்களாகவும் இருப்பதாகவும் இது தொடர்பான ஆய்வு மேறகொண்ட ”டாக்டர் ஜார்ஜ் ஹப்பர் டெலிகிராப்”  ஆங்கில நாளிதளில் தெரிவித்துள்ளார்.
அதிகாலையில் கண் விழிப்பது சுறுசுறுப்பானது மட்டமல்ல ஆராக்கியமானதும் கூட என்று தெரிவிக்கின்றது இந்த ஆய்வு முடிவு.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...