Aug 30, 2013

இன்று சென்னை தினம். சென்னை உருவாகி 374 ஆண்டுகள் முடிவடைகிறது.


இன்று சென்னை தினம். சென்னை உருவாகி 374 ஆண்டுகள் முடிவடைகிறது. சென்னை நகரை தமிழர் நகரமாக மீட்டெடுக்க இன்று நாம் சூளுரைப்போம்.

வரலாற்று ரீதியாக சென்னை நிலப்பரப்பை தமிழ் மன்னர்கள் ஆண்டு வந்துள்ளனர். சோழர்களின் கட்டுப்பாட்டில் இப்பகுதிகள் இருந்துள்ளது. பிற்காலத்தில் பல்லவர்கள் , நாயக்கர்கள், ஆங்கிலேயர் , பிரெஞ்ச் இனத்தவர் கட்டுப்பாட்டிலும் சென்னை நகரம் இருந்துள்ளது. மொழிவாரி மாநிலம் பிரிக்கப் பட்டபோது சென்னையை ஆந்திராவோடு இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்தனர் தெலுங்கர்கள். 'மதராஸ் மனதே' என்று முழக்கமிட்டனர். ஆனால் தமிழர்களின் கடுமையான போராட்டத்தின் விளைவாக சென்னை மீட்கப்பட்டது. ஆனால் தமிழர் வழிபாட்டுத் தலமான திருப்பதியை நாம் இழக்க நேரிட்டது.

இன்று தமிழக அரசின் கட்டுப்பாட்டில் சென்னை வந்துவிட்டாலும் வேற்றின மக்களின் வேட்டைக்காடாக மாறியுள்ளது சென்னை . தமிழர்கள் வாடகை வீட்டிலும் , வேற்றின மக்கள் சொந்த வீட்டிலும் வாழ்கின்றனர். சென்னையை தமிழர்களின் நகரமாக முழுவதும் மாற்ற முடியாத சூழ்நிலையே இப்போது உள்ளது. வேற்றின வணிகர்கள் கடைகளுக்கு தமிழ் பெயர் பலகை வைப்பதில்லை. குடியிருப்புகளுக்கு தமிழ் பெயர் வைப்பதில்லை, இல்லங்களுக்கு வைப்பதில்லை. தமிழ் மொழியை படிக்கும் குழந்தைகளும் இங்கு குறைந்து வருகின்றனர். சிலர் தமிழில் பேசுவதையே அவமானமாக கருதுகின்றனர். அந்நியர்கள் பண்பாட்டையே பெரிதும் மதிக்கிறார்கள், கடைபிடிக்கிறார்கள்.

இந்த நிலை மாற வேண்டும். இனி வரும் காலங்களின் சென்னையை தமிழர் நகரமாக மாற்றும் வேலையை நாம் முன்னெடுப்போம். தமிழ் மனம் வீசும் சென்னையை காண வேண்டுமென்றால் தமிழ் இல்லாமல் சென்னை இல்லை , தமிழ் தெரியாமல் சென்னையில் குடியேற முடியாது என்ற நிலையை நாமே உருவாக்குவோம். தமிழர் ஆட்சி வந்தவுடன் , மீண்டும் சென்னையை மீட்டெடுக்கும் பொறுப்பு தமிழர்களுக்கு உள்ளது என்பதை மனதில் வைத்து சென்னை தினத்தை கொண்டாடுவோம். வாழ்க சென்னை மாநரகம். வாழ்க தமிழ் !

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...