Aug 30, 2013

நாதஸ்வர வித்துவான் நா. க. பத்மநாதன்

நாதஸ்வர வித்துவான் நா. க. பத்மநாதன்

nkpathmanathan
யாழ்ப்பாணத்து அளவெட்டியில் 1931ம் ஆண்டு பிறந்தவர் பத்நாதன். தன் ஏழாவது வயதினிலேயே இசைத்துறைக்குள் நுழைந்த இவர் முதற்குரு அவரது தந்தையார் நாதஸ்வர வித்துவான் நா. கந்தசாமி அவர்கள்.

எந்தக் கலையாயிருந்தாலும், முதலில் தாளத்திலே பயிற்சியும் தேர்ச்சியும் அடைய வேண்டும் என்பது தந்தையாரின் குருவாக்கு. இதன் பிரகாரம் சுமார் பத்துவருட காலம் பிரபலமான வித்துவான்கள் பலருக்கும் தாளக்காரராய் பணிபுரிந்தார் இவர். அவரது தகப்பனார் தொடக்கம், அக்காலத்தே பிரபல தவில் வித்துவான்களாய் இருந்த வலங்கைமான் சண்முகசுந்தரம்பிள்ளை, திரு முல்லைவாசல் முத்துவேற்பிள்ளை போன்றவர்களுக்கும் நல்லூர் முருகையாப்பிள்ளை, அப்புலிங்கம் பிள்ளை ஆறுமுகம்பிள்ளை போன்ற வித்துவான்களுக்கெல்லாம் பத்மநாதன் அவர்கள் தாளக்காரராய் இருந்துள்ளார்.

தனது தந்தையாரை தொடர்ந்து சுந்தரம்பிள்ளை, கந்தசாமிப்பிள்ளை, திருநாவுக்கரவு ஆகியோரிடமெல்லாம் நாதஸ்வரம் கற்ற இவர் தனது பதினெட்டாவது வயதில் அன்று பிரபல்யமான தவில் நாதஸ்வரக்குழுவினை நடாத்திவந்த இவரது மாமனார் அளவெட்டி நே. கணேசபிள்ளை அவர்களது குழுவில் உதவி நாதஸ்வரம் வாசிப்பவராய் இணைந்து கொண்டார்.

இவர் இருபத்தைந்தாவது வயதில் தனியாய் இசைக்குழுவொன்றை ஆரம்பித்தபோது இவருடன் உடன் வாசிப்பவராய் பாலகிருஸ்ணனும், தவில் வாசிப்பவர்களாய் பிரபல தவில் மேதை தட்சணாமூர்த்தி அவர்களும், இவரது மைத்துனர் சாரங்கபாணியும் இணைந்து கொண்டார்கள்.

பத்மாதன் அவர்கள் உலகின் பல நாடுகளுக்கும் சென்று கச்சேரிகள் செய்துள்ளார். 1968ம் ஆண்டில் சென்னை மியூசிக் அக்கடமியிலும், பின் மதுரையில் நடைபெற்ற இரண்டாவது உலக தமிழாராய்ச்சி மாநாட்டிலும் நாதஸ்வரம் வாசித்து பாராட்டுப் பொற்றுள்ளார். 1979இல் இலண்டனில் இருக்கின்ற பிரபலமான இசைக்கூடங்களில் ஒன்றான West Minister Hall இல் இவரது இசைக்கச்சேரி இடம்பெற்றது.

1963ம் ஆண்டு சிலாபம் முன்னேஸ்வரம் தேவஸ்தான கும்பாபிடேகத்தில், மகாராஜபுரம் சந்தானம் அவர்கள் பத்மநாதன் அவர்களை பாராட்டி பொன்னாடை போர்த்தி கௌரவித்திருக்கின்றார்கள். 1964இல் பன்னாலையில் நடைபெற்ற சேக்கிழார் மாநாட்டில் சேர் கந்தையா வைத்தியநாதன் அவர்கள் இவருக்கு “நாதஸ்வர கலாநிதி” என்ற பட்டத்தை வழங்கி கௌரவித்தார்கள்.

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திலே 47 வருட காலம் ஆஸ்தான வித்துவானாகவும் பணிபுரிந்த இவருக்கு, 1982ம் ஆண்டு இலங்கையில் கலைஞர்களுக்கான உயரிய விருதான கலாசூரி விருது கிடைத்தது.

தன் இறுதிக்காலம் வரையில் ஒரு நாதஸ்வரக் கலைஞனாகவே வாழ்ந்த கலசூரி பத்மநாதன் அவர்கள், தனது 72 ஆவது வயதில் 2003ம் ஆண்டு ஜூலை 15ம் திகதி இறையடி சேர்ந்தார்.நாதஸ்வர வித்துவான் நா. க. பத்மநாதன்

தன் இறுதிக்காலம் வரையில் ஒரு நாதஸ்வரக் கலைஞனாகவே வாழ்ந்த கலசூரி பத்மநாதன் அவர்கள், தனது 72 ஆவது வயதில் 2003ம் ஆண்டு ஜூலை 15ம் திகதி இறையடி சேர்ந்தார்.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...