Aug 10, 2013

இந்தோனேசியாவில் எரிமலை வெடித்து 6 பேர் பலி! - 2000 மீற்றருக்கு தீப்பிழம்புகள் பரவின.

News Service
இந்தோனேசியாவின் மத்திய பகுதியில் உள்ள பலாவூ தீவில் அமைந்துள்ள ரொகடென்டா எரிமலை நேற்று வெடித்து, அதிலிருந்து வெளியேறிய தீப்பிழம்புகள் அருகில் இருந்த கடற்கரையில் விழுந்தது. இதில், 2 சிறுவர்கள் உள்பட 6 பேர் உயிரிழந்ததாக எரிமலை ஆய்வு மைய தலைவர் சுரோனோ தெரிவித்தார். கடந்த அக்டோபர் மாதத்திலிருந்தே ரொகடென்டா எரிமலை குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. எரிமலையிலிருந்து 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு மக்கள் நடமாட்டத்துக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. எரிமலை சனிக்கிழமை அதிகாலை 4.27 மணிக்கு வெடித்தது. பின்னர், தொடர்ந்து 4 மணி நேரத்துக்கு தீப்பிழம்புகளை கக்கி வந்தது.
   எரிமலை வெடித்தபோது உயிரிழந்தவர்கள், தடை செய்யப்பட்ட இடத்தில் இருந்தனரா என்பது தெரியவில்லை. எரிமலை வாயிலிருந்து சுமார் 2 ஆயிரம் மீட்டர் தூரத்துக்கு தீப்பிழம்புகள் பரவின என்று சுரோனோ தெரிவித்தார். இந்தோனேசியாவின் ஜாவா தீவில் உள்ள மெரபி எரிமலை கடந்த 2010-ம் ஆண்டு வெடித்ததில் 350-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தது நினைவுகூரத்தக்கது.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...