Sep 13, 2013

திருமலையில் அகத்தியர் சிவலிங்க கோயில் – ஒரு வரலாற்றுச் சான்று

இலங்கை வரலாற்றிலே கிழக்கு மாகாணம் தனியான வரலாற்றுச் சான் றுகளை தன்னகத்தே கொண்டமைந் த ஓர் மாகாணமாகும். அதிலும் குறி ப்பாக மட்டக்களப்பு, திருகோணம லை ஆகிய மாவட்டங்கள் இந்து கலாச்சார விழுமியங்களை பேணிப் பாதுகாத்த வரலாறுகள் தற்போதும் புல னாகின்றது. அதிலும் திருகோண மலை மாவட்டத்தில் கங்கு வேலி எனும் இடத்தில் மிகவும் பழமை வாய்ந்த அகத்தியர் சிவலிங்க கோவில் அமையப்பெற்றிருப்பது குறிப்பிடத் தக்கது. ஆனால் கடந்த வன்செயல் காரணமாக இவ்வாலயத்தின் வழிபாடுகளை மேற்கொள்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டது. தற்போது அவ் ஆலயத்தின் நிருவாக சபையினர் ஒன்றிணைந்து ஆலயத்தினை புனரமைப்புச்செய்த திரு விழாக் களை மேற்கொள்ள நடவடிக்கை மேற் கொண்டு வருகின்றார்கள்.
திருகோணமலை மாவட்டத்தில் மிக வும்புரதான வரலாற்றுச்சின்னங்க ளைக் கொண்டமைந்த கங்குவேலி அகத்தியர் ஆலயத்தினை கிழக்கு மாகாண முதல் வரும் த.ம.வி.பு கட்சியி ன் தலைவரு மான சிவநேச துரை சந்திரகாந்தன் நேரில் விஜயம் செய்து பார்வை யிட்டமை குறிப்பிடத்தக்கது இவ்விஜயத்தின்போது மாகாண விவசாய கால்நடை அமைச்சர் துரையப்பா நவரெட்ணராஜா அவர்களும் உடன் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கங்கு கோயிலில் அமைந்துள்ள அப்புராதான ஆலயம் பல வரலாற்றுக் கதைகளோடு தொடர்புடைய தாக அமைந்திருக்கின்றது. தொல்பொருள் ஆய்வினை மேற்கொள்ளும் பட்சத்தில் பல வரலாற்றுச்சான்றுகளை நாம் தெளிவாக அடையாளம் கண்டு கொள்ளக்கூடியதாக இருக்கும் ஆடி அமாவாசை தீர்த்தத்தி னை கொண்டமைந்து திரு விழாக்களை நடத்தி வந்திருந் தபோதிலும் அண்மைக்காலமாக பூரணவழிபாடுகள் இடம் பெறாமல் இருப்பது அப்பிரதேச மக்கள் பெரும் கவலை கொள்கின்றார்கள். இவ் வாலயத்தின் சிறப்பு தலபுராணத்திலும் இடம் பெற் றிருப்பது குறிப்பிட த்தக்கது. இவ்வாலயத்தின் மகாசபைத்தலைவர் கனகசிங்கம், பொரு ளாளர் மதிவதணன், நிருவாக சபைத் தலைவர் தவராசா ஆகி யோர் தற்போது ஆலயத்தை நிருவகித்து வருகி ன்றனர்.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...