Sep 12, 2013

மாரடைப்பின் அறிகுறிகள் - Signs of Heart attack - வீடியோ இணைப்பு

மனித இதயம்: அது எப்படிச் செயலாற்றுகின்றது
* இதயம் மார்புப்பகுதியின் மையத்தில் சற்றே இடப்புறம் அமைந்துள்ளது. 
* நிமிடத்திற்கு 60லிருந்து 90 முறை வரை துடிக்கும் இதயம், ஒரு நாளைக்கு சுமார் 1 லட்சம் முறை துடிக்கிறது. 
* இதயத்தின் ஒவ்வொரு துடிப்பும் இரத்தத்தினை உடலில் செலுத்துகிறது. 
* கரோனரி தமனிகள் கொண்டு செல்லும் இரத்தத்தில் இருந்து இதயமும் உடலின் மற்ற பாகங்களும் தேவையான உணவையும், ஆக்சிஜனையும் பெற்றுக் கொள்கின்றன. 
* இதயம் வலப்புறம் இடபுறம் என இரு பிரிவுகளாக உள்ளது. இதயத்தின் இருபகுதிகளிலும் இரண்டு இரண்டு அறைகள் உள்ளன. மொத்தத்தில் நான்கு அறைகள் உள்ளன. 
* இதயத்தின் வலது மேல் அறை உடலிலிருந்து அசுத்த இரத்தத்தைப் பெற்று அதை வலது கீழ் அறைக்கு அனுப்ப கீழ் அறை நுரையீரலுக்கு செலுத்துகிறது. 
* இரத்தம் நுரையீரலில் சுத்திகரிக்கப்பட்டு ஆக்சிஜனைப்பெற்று பின்பு இதயத்தின் இடப்புற மேலறைக்கு வருகிறது. இங்கிருந்து இடது கீழ் அறைக்கு சென்று அங்கிருந்து உடலின் பல பகுதிகளுக்கும் செலுத்தப்படுகிறது.  
* இதயத்தின் இடப்பகுதியில் இரு வால்வுகள் (மைத்ரல் மற்றும்  அயொடிக்) மற்றும் வலப்பகுதியில் இருவால்வுகள் (பல்முனரி மற்றும் மூவிதழ்) உள்ளன. இந்த நான்கு வால்வுகளும் ஒருவழி கதவு போல செயல்பட்டு இதயத்திற்குள் ரத்த ஓட்டத்தை  முறைப்படுத்துகின்றன.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...